கொஞ்சி நடந்ததொரு கொட்டாவி ஆறு
அஞ்சி வளைவதற்கு அக்குள்தந்த மலையிடையே
மிஞ்சி பாய்ந்தது மிஞ்சுடை மகளீராய்
எஞ்சியது இப்போது எங்கள் நினைவுகளில்..
ஆள்தின்னும் வேககங்கை அல்லயிவள் ஆசைத்தடாகம்
நாள்தோறும் சீராய் நடந்தவள் கால்தேய்ந்ததோ
அணைதடுப்பில் ஆழமில்லா அழகிய சிறுகடல்
இணைக்கொரு கோடிகொடுத்தும் இல்லாமல்போன மானக்காரி...
ஊற்றினில் ஊறுவந்ததோ ஊழ்வந்ததோ அறியேன்
ஊரெல்லாம் திரிந்தவள் ஊமையாகி போனாள்
நின்றயிடத்தே புதைந்து போன ஜீவசமாதி
நின்றயிடத்தே புல்வந்ததடி ஆண்பால் கொண்டாறே
நீந்திய இடமின்றி நடைபாதையானதடி.
நின்ற இடமே நிலமாகி போனதடி..
என்று காணுமோ எங்கள் ராஜ்ஜியம்
அன்று வாழவா அன்பின் ஆறென
இன்று உனக்காய் இறங்கிய கண்ணீர்தான்
இருக்கும் நினைவலையின் இன்றைய நீரூற்று...
ஆம் எங்கள் ஆசைநதி ஆறிபோனது
ஆம் எங்கள் ஆசைபோலதும் காலம்போனது..
நீந்தி விளையாண்ட தொந்தியாறு
நீர்த்து போனதெங்கள் தொப்பையாறு...
Post a Comment