புத்தகமே என் புத்தகமே
நற்றொரு கேள்வி உதித்தது என்னுள்..
ஊடல் தகர்த்து
உன்னை அடைந்து
ஆடை தளர்த்தி
அங்கம் புரட்டி
அறிந்த பின்னே - கேட்கிறேன்.; உள்ளதை சொல்
உன் உள்ளக் குளத்தில்
உள்ளக் காதல் யார்மீது?
கருத்தை எடுத்து
வார்த்தை சரத்தில்
நெருக்கி அமைத்து
உன்னுள் விதைத்த
படைத்தவன் மீதா? - இல்லை
புரட்டிப் புரட்டி
உள்ளம் திரட்டி
உன்னை சுகிக்கும்
வாசகன் மீதா?. - விடைசொல்..
மூடக்கவிஞனே
குறும்பு முளைத்ததோ?
காதல் செய்யத்தான்
காலம் இருக்குதோ? - எனினும்
உள்ளே விதைத்த
எழுத்தாளனோ!.
மெல்லச் சுவைத்த
வாசகனோ!
என் மனதில்
எப்போதும் காதலனாவதில்லை
என்னை உணர்ந்து
என்னில் நிறைந்து
என்போல் நடப்பவனே
எனதரும் காதலன்..
إرسال تعليق