காதலன் புலம்பல் பதிகம்

#ஊருகத #நெஞ்செல்லாம்_நெறஞ்சிருக்கா.. 

தலைவன் தோழனிடம் புலம்புதல்...  

கிராமிய நடைக்கு மரபு கவிதை ஒத்துவருமான்னா.. 
வரும்.. 
அதுவும் புலம்பல சொல்ல முடியுமா? .. முடியும்..
 அப்படி ஒரு முயற்சிதான் இது.. ஒரு மணிநேரத்துக்கும் முன்ன தான் தம்பிகிட்ட ரெண்டுநாள் டைம் கேட்டேன்.. ரொம்ப யோசிக்காம திடீர்னு எழுதிட்டேன் ..  திருவாசகம் ல வர திருப்புலம்பல் இப்படி ஒரு ஐடியாவுல இருக்கும் அத கிராமிய நடைக்கு எடுத்துட்டு வந்துருக்கேன்..

#கொச்சக_கலிப்பா  #காதலன்_புலம்பல்_பதிகம்.. 

நெஞ்செல்லாம் நெறஞ்சிருக்கா நெல்லாத்தான் வௌஞ்சிருக்கா
பஞ்சாத்தான் நானிருந்தேன் பாதகத்தி கொளுத்திபுட்டா
பஞ்சத்தில் படும்பாட்ட பசுமையில கொடுத்துபுட்டா
கெஞ்சாத கொறையாத்தான் கிறுக்காநான் அலையிறனே..  1

நறுக்குன்னு வெட்டிபுட்டா நரியாட்டம் தந்திரமா
சுறுக்குன்னு குத்தாம சூசகமா கொன்னுபுட்டா
முறுக்கித்தான் திரிஞ்சேன்டா மிடுக்கெல்லாம் போச்சேடா
சிறுக்கித்தான் என்மனச செலதுண்டா பிரிச்சாளே.. 2

பருப்பாத்தான் கடைஞ்சிட்டா பழசெல்லாம் மறந்தேன்டா
நெருப்பாட்டம் கொதிக்கிறேனே நெனப்பெல்லாம் எரிச்சிட்டா
மருவாத கொடுத்தாலும் மனசுக்கு பிடிக்கலயே
கருவாடா ஆனேன்டா கருவாச்சி அவளாலே.. 3

கள்ளூரூ கண்ணழகி கண்பட்ட நோவுக்கு
உள்ளூரு வைத்தியந்தான் உதவாது போனானே
முள்ளொண்ணு குத்தித்தான் மலையொன்னு சாஞ்சதடா
மெள்ளத்தான் மினுக்கியவ மென்னுத்தான் போனாளே.. 4

நெனச்சாலே நாக்கூறும் நம்மாத்து தண்ணியுந்தான்
நெனச்சாலே கசக்குதடா நெத்திலியும் புளிக்குதடா
மனசால வஞ்சத்த மவதானே செஞ்சிட்டா
வனசோலை எல்லாமே வாடித்தான் போயிடுச்சே. 5

அழுக்கான துணிமாட்டி அஞ்சாறு நாள்திரிவேன்
முழுசாதான் மாத்திபுட்டா மொகங்கூட மாறிடுச்சே
வழுக்குமர வழுக்கும்படி வழுக்குதடா சிரிச்சநொடி
கொழுப்பால கொழுத்தவதான் கொன்னுபோட்ட அந்தநொடி.. 6

பிடிசோறும் எறங்கலயே பழச்சாறு பிடிக்கலயே
அடிச்சாலும் வலிக்கலயே அவவாசம் மறக்கலயே
முடிச்சிதான் போட்டுபுடும் முடிவுக்கு வந்தேன்டா
இடிவிழுந்த பனையாட்டம் இளமனசு ஆனதாலே.. 7

ராவெல்லாம் ரணமாச்சு ரவபார்வ ரொணமாச்சு
சேவல்தான் கூவயில சேராத சுருதியாச்சு
மாவெல்லாம் மழையால வீணான கதையத்தான்
ராவெல்லாம் வீணாச்சு ரவிக்ககாரி நெனப்பாலே.. 8

மருந்தொன்னு இல்லனு மகமாயி கோயிலுக்கு
கரும்பொன்னு நேந்துகிட்டு கருப்பாயி கும்பிடுறா
விரும்பித்தான் வந்தவென வெண்ணீரா கொதிக்குதடா
துரும்பாத்தான் போனேன்டா தொல்லயிது தாங்கலயே.. 9

அழுவனும்போல் தோணுதடா ஆகாயம் கிழியுதடா
புழுவாத்தான் துடிக்கிறனே புண்ணான மனசால
கழுவாத பாத்திரமா கரபட்டு கெடக்குறனே
ஒழுவாத கண்ணெல்லாம் உண்மையில நடிபேதான்.. 10


ஏதோ எழுதினேன் ஆனா இசைல கூட பிரிந்திசை தானாம்ல..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post