அசுரர்தம் படையது பொடிபட அடியெடு அறுமுக சரவண பவகுகனே.
பதுமனை கூறிட கூரிய வேலொடு களம்புகு கடம்பர்தம் திருமருகே
சுடர்விடு சிவனுரு சுடரென வருபவ முருகவெண் கதிரென ஔிர்பவனே
முதுவில இளையவன் முழுதெழில் அழகிய முருகென இனியவை அருள்பவனே.. 1
இருவிழி சுடரொளி இருளினை சுடுமொளி இடரினை கெடுமொளி கொண்டவனே
அமரர்தம் தலைவனே அருளிட இனியவே அசுரர்கள் கெடஅயில் விடுபவனே
எமபடர் வந்தெனை எடுத்துயிர் கொளவரின் எதிரினில் தடம்பதி எனதுயிரே.
கருவுரு குருவுரு திருவுரு எனதுணை எனவரு எனதிறை திருமுருகே… 2
மதிகெட சூரனை விதிகெட பிளந்திரு பிளவென துணைகொளும் பரங்குருவே.
விதிகெட வினைகெட விளங்கிடும் வரிகெட விளங்குநல் விதத்தினில் வருபவனே
அரணொடு அரியவர் பிரமரும் வணங்கிட ஒருநொடி பதுமனை பிளந்தவனே
சரவண பவகுக வடிவுடை இடும்புடை கடம்பனின் திருவருள் தான்பொருளே. 3
அடைவில புகழொடு அமரர்தம் பணிபுரி திருநிலை பெறுவென தருமிறையே..
கொடையவை கொடுத்திரு கரமது சிவப்புரு பெருந்தகை கொற்றவை தம்மகவே
உடையுடை படையுடை தடைபடின் அதைவுடை எழிலுடை வடிவுடை செஞ்சுடரே
விடைபெறு முடிவினில் துணையென வருபவ இமையவர் திருமக சிறுவழகே... 4
பற்றினை பற்றிய பற்றது பற்றிட பற்றொடு பற்றுனை பற்றிடவே
நற்றுணை சிற்றிடை முற்றிய கற்றுடை முற்றிலன் பற்றிட தருகுகனே
கற்றிலேன் கற்றிலேன் கற்பனை பெற்றிலேன் கற்றவை பெற்றவை சற்றெனவே
இற்றிலேன் முற்றிலேன் கற்றவை விற்றிலேன் கற்பொரு கற்பினை கற்றிடவே.. .5
கண்ணென கண்டிலேன் கண்டிட விண்டிலேன் மண்டல பூசைகள் செய்திலனே
மண்ணென பொன்னென விண்ணென எண்ணில எண்ணது வாகிய பரம்பொருளே
இண்ணெனும் நொடியினில் இருபிள வெனவே பிளந்தது பிளந்தது மாமரமே
மண்ணுயர் குன்றது பிளவொடு தூள்பட விரைவொடு வேல்விடு மால்மருகே 6
எமபடர் எதிர்வர எனக்கொரு துணையென எதிர்த்திட வருபவ சண்முகனே
தமருக பரிபுர ஔிகொடு நடநவில் மலைமகள் அருளுடை கடம்பழகே
அமரரும் துயரற அசுரரும் பயமுற அடுசமர் புரிபவ படைபதியே
எமதுளம் எழுந்தருள் திருகுக வடிவுடை மலைபதி பழனியின் சிறுகுழவே.. 7
மற்றது மறந்தது மண்ணதும் மறந்தது மன்னவர் நினைவது நின்றிடவே
சுற்றமும் மறந்தது சூழலும் மறந்தது இற்றதும் மறந்தது எம்முயிரே
நெற்றிகள் ஆறுடை வெற்றிகள் நூறுடை சிற்றிடை வேந்தனை பற்றிடவே
வெற்றிகள் சேர்ந்திடும் மேன்மைகள் கூடிடும் குற்றங்கள் தீர்ந்திடும் நிச்சயமே.. 8
ஔியுரு வானவர் ஔியொடு வாழ்பவர் ஔிதரு நாயகர் கந்தனுமே
வெளிவளி ஒலியென ஔியொடு நிறைந்தவ சதுர்மறை ஓதிடும் தலைமகனே
களிதரு பலமுடை குணமுள மருதனை வணங்கிட வணங்கிட மனமகிழும்.
உளிபடு கருங்கல்லாய் உளமது சிறப்புரும் உலகது புகழ்ந்திடும் நிலைவருமே.. 9
அகமதில் அவர்வர அகண்டது மனமென அகத்தினில் விரிபவ கருப்பொருளே
சகத்தினில் நிலைபெறு சூத்திரம் தருபவ சூக்கும நாயக சிவகுருவே
தகத்தக தகவென தகித்திட திகழ்ந்திடும் சுடரது உடலென கொண்டவனே
மகவென வருபவ மனமது நிறைவுற வரமது அருளிடும் சௌமியனே... 10
முற்றிலும் முற்றென நிற்றலில் உற்றவர் முற்றதில் முற்றெது தருபவரே
வற்றிட வற்றிட வசனங்கள் வற்றிட புத்தியில் நின்றவர் பூதபதே
அற்றவை ஒற்றவை அத்துனை விட்டவை பட்டவை இட்டவை உமதருளே
நற்றுணை நற்றுணை நற்றுணை என்றுனை நம்பிய அன்பர்கள் பாடுவேரே.. 11
உள்ளவை உள்ளன உள்ளது உள்ளன உள்ளவை உள்ளது உள்ளனவே
கள்ளமும் முள்ளென உள்ளொடு உள்பட வெள்ளமும் வெள்ளென வந்ததுவே
அள்ளிட அள்ளிட அள்ளுவர் அள்ளிட அருளது பெறுகிடும் திருமுருகே. 12
إرسال تعليق