மயக்கத்தில் இருந்து தெளிந்த வருண் . தான் இருக்குமிடத்தை சுற்றி பார்த்தான் காலியான அறை நடுவில் ஒரு மேசை மேசைக்கு மேலே பளீச்சென வெளிச்சம் சிந்தும் லைட். இரண்டு சேர்கள் ஒருபுறம் அவனை அமர்த்தி கைவிலங்கை மேசையில் மாற்றி வைத்திருந்தனர். தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளோம் என்பதை புரிந்துக்கொண்டவன். அதற்கு முன் நிகழ்ந்தவை எல்லாம் நினைவுக்கு கொண்டுவர பாடுபட்டவனுக்கு அவை நினைவுக்கு வந்தது..
இன்று மதிய வேளையில் அவனும் அவன் நண்பன் மதனும் ஒரு உயர்ரக உணவகத்தில் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டு சென்று திரும்பும் போது தன்னை பேலீஸ்காரர்கள் பின்தொடர்வதை உணர்ந்தவன் எதையோ சொல்லி மதனை ஒரு இடத்தில் இறக்கி விட்டு அவன் தப்பிக்க முற்படும் போது ஒரு கார் துரத்தலின் பின்பு ஒரு மரத்தில் மோதி ஆன விபத்தில் தான் மயங்கிவிட்டதும். பின் இங்கிருப்பதும் புரிந்தது அவனுக்கு.. இத்தனைக்கும் அவன் போலீஸ் தேடுமளவு எந்தவொரு சிறு தவறையும் செய்யவில்லை. அதுவும் அவனை உறுத்த ஆயிரமாயிரம் கேள்விகள் அவனுள் எழ அவன் அயர்ந்து போனான்.
அப்போது அங்கு வந்த இரு போலீஸ்காரர்கள் அவனை விசாரிக்க அமரும் போதுதான் அவனுக்கு ஒன்று புரிந்தது . உடனே சார் தயவு செஞ்சி என்ன விடுங்க நான் இப்ப ரொம்ப முக்கியமான ஒரு விசயத்த செய்யனும் ப்ளீஸ். என்றான்..
அதை கவனிக்காத போலீஸ்காரர்கள் அப்போதும் அவனை விசாரிப்பதில் குறியாக இருந்தனர்.. அதனை உணர்ந்த வருண் நான் எல்லாமே சொல்லிடுறேன் ஆனா அது முடிஞ்சதும் என்ன நீங்க நான் சொல்ற இடத்துக்கு கூட்டிட்டு போகனும். இந்த ஊருக்கே ஒரு ஆபத்து வரதுக்கு முன்னால நாம அத தடுத்தாகனும்.
அந்த நகரத்தின் சட்டப்படி விந்தணுக்களை தனியாக வாங்க முடியாது ஆனால் வருண் ரகசியமாக ஒரு மருத்துவமனையில் பத்து நபரின் விந்தணுக்களை வாங்கியிருக்கிறான். இதன் விளைவு விபரீதமென சந்தேகித்த போலீஸார் அவனை பின்தொடர அவன் தப்பி ஓட சந்தேகம் வலுத்து இப்போது கைதாகி கிடக்கிறான்.
அதைப்பற்றி உங்களுக்கு தெரியனும்னா என்ன நான் சொல்ற இடத்துக்கு கொண்டு போங்க . அப்பதான் சொல்வேன் என் கைவிலங்க நீங்க ஜீப்லயே கூட கட்டி வெச்சிக்கோங்க ஆனா இந்த ஊர காப்பாத்தனும்னா நாம அங்க போய் ஒரு திருட்ட தடுக்கனும் அது நடக்கலன்னா பெரிய பெரிய விபரீதத்தை இந்த உலகம் சந்திக்கும். அதுவுமில்லாம இந்த கேள்விக்கு நான் இப்ப பதில் சொன்னாலும் உங்களுக்கு புரியாது அதனால சொல்றத கேளுங்க . என கெஞ்சும்படியும் கொந்தளித்தும் பேசினான் வருண்.
சரி என வருண் ஜீப்பில் ஏற்றப்பட்டான். கைவிலங்கை அதில் பொருத்தியிருந்தனர். அவன் சொன்ன இடத்துக்கு போலீஸாரும் வந்து நிற்க அந்த ஒற்றை தனி வீட்டுக்கு முன்பு ஒரு பத்து கார்கள் நிற்க. அங்கு உள்ளே பலர் துப்பாக்கிகளுடன் வீட்டை உடைத்து உள்ளே நுழைவதை கண்ட இரு போலீஸாரும் தன் துப்பாகியுடன் இறங்க அவர்களை அழைத்த வருண்.
சார் வேகமா வீட்டுக்கு பின்னால போய் ஒரு செப்டிக் டேங்க் மாதிரி இருக்கும் அதுல இறங்கி உள்ள இருக்குற ஒரு மரகதவுல ஒரு பாஸ்வேர்ட் லாக் இருக்கும் அதுவொரு அனலாக் சிஸ்டம் அதுல இருக்க ரோலர்கள வி ஆர் 378 ன்னு கொண்டு வந்தா திறக்கும். நல்லா ஞாபகம் வெச்சிக்கோங்க வி ஆர் 378 . அப்புறம் உள்ள போனீங்கன்னா. இந்த வீட்டோட பேஸ்மெண்ட் வரும்.
நிலைமை கைமீறி போய்டுச்சி இத்தன பேர உங்க ரெண்டு பேரால சமாளிக்க முடியாது. அதனால பேஸ்மெண்ட்ல போய். நான் சொல்றத அப்படியே சொல்லுங்க சொல்லிட்டு வந்த வழியா வெளிய வந்துடுங்க.
ஹலோ கிட்
மார்க் மை கம்மாண்ட்
362 362 45
அப்படின்னு சொல்லிட்டு வேகமா வெளிய இங்க வந்துடுங்க. சீக்கிரம். என்றான். வருண்.
எல்லாம் அவசர அவசரமாய் அவர்கள் செய்து முடித்து இங்கு வருண் இருக்கும் ஜீப்பிடம் வந்து மூச்சு வாங்கும் போதே அங்கே படபடவென துப்பாக்கி சுடும் சத்தம் வர திரும்பி உள்ளே ஓட எத்தனித்தவர்களை வருண் தடுத்தான். சில நொடிகளில் சப்தங்கள் அடங்கி நிசப்தமான பிறகு வருண் சொன்னான் இப்ப நாம உள்ள போகலாம் என்று.
மூவரும் உள்சென்று பார்க்க அந்த பின்மாலை இருளில் அந்த வீட்டில் இருபதுக்கும் மேற்பட்ட பிணங்கள் ஆங்காங்கே திட்டுத்திட்டாய் ரத்தக்குளங்கள். எல்லாம் கண்டு போலீஸார் இருவரும் விதிர்விதிர்த்து விட்டனர். அவர்கள் துப்பாக்கி முனையில் வருணை பிடிக்க முற்பட எதிரில் ஒரு இரும்பு குவியல் போன்ற ஒன்று துபபாக்கியுடன் எழுந்தது. அதன் உராய்வு சப்தங்களை கேட்டு சுயநினைவுக்கு வந்த வருண் ஹோல்ட் ஆப் கிட் என்க அது மீண்டும் தன் பழைய நிலையிலேயே அமர்ந்திருந்தது. பதட்டத்தின் உச்சிக்கே போன போலீஸ்காரர்கள் தன் பட்டாளத்தை வரவைத்து இதர பணிகளை சொல்லிவிட்டு . கிட்டையும் வருணையும் கைது செய்து கொண்டு போயினர்.
அவர்கள் விசாரணைக்கு வருண் நிதானமாக பதில் சொன்னான். ஒருநாள் அவன் பழைய இரும்புகளை வாங்குமிடத்துக்கு சென்றபோது அங்குதான் கிட் என்னும் எந்திரமனிதன் விளையாட்டு பொருட்களோடு எடைக்கடை குப்பையில் இருப்பதை பார்த்தவன் பணம் குடுத்து அதை வாங்கி வைத்திருந்தான் அதன் ஆற்றலை பார்த்து வியந்த வருண் அதற்கு மனிதனுக்கு ஈடான ஆற்றல்களை விரும்பி நியூரல் ஸ்கீமா தயாரிக்க முயன்றான் முயற்சி பயனளிக்க வில்லை பின் ஒரு யோசனை செய்து மனிதனின் விந்தணுக்களில் இருக்கும் டிஎன்ஏ குறிப்புகளை வைத்து அதனை டிஜிட்டல் டேட்டாவாக மாற்றி அதனை நியூரல் ஸ்கீமாவிற்கு பதிலாக பயன்படுத்த நினைத்தான். அதனால் தான் ஒரு பத்து பேரின் விந்தணுக்களை மருத்துவமனை விந்தணு வங்கியிலிருந்து வாங்கியதாகவும் ஒப்புக்கொண்டான் ..
இப்போது மனிதனின் ஆற்றல்கள் சிந்திக்கும் திறன் என எல்லாம் கிட் என்னும் மனித ரோபோவிடம் இருக்கிறது தெரிந்து சிலர் இதை கடத்தி தீவிரவாதிகளுக்கு விற்க திட்டமிட்டதும் அதனால் தான் அவர்கள் வந்ததும் கொல்லப்பட்டதும். நடந்தது என எல்லாம் கூறி முடித்தான்..
எல்லாம் முடித்து பதிவாக்கி வருண் மீது வழக்கு பதிவு செய்து வெளியே வந்து பார்த்த போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சி. ஆம் சுயமாக சிந்திக்கும். அந்த கிட் ரோபோ இப்போது காணவில்லை.. தானாகவே சுற்றியிருந்தவர்களை தாக்கி தப்பித்து சென்றுவிட்டது.. மனிதனின் எண்ணமல்லவா…
إرسال تعليق