சண்முக சட்கண்டம் - 11 - நீபோதும்

 அடியவர் தொழவே அருளிடும் முருகா அருகில்  வாராயோ

பொடிபடு உடலை புனிதமும் பெறவே புதுமை தாராயோ

வடிவதில் சுடராய் வருதுயர் தவிர்ப்பாய்

வறுமை தீராயோ

நொடிபொழு ததிலே நெடிதுயர் கிரியை

பிளந்த வேலோனே.. 1


கடியவை விரும்பும் கடம்பனே உனது கரமே தாராயோ

பொடிநடை யெனவே பதமது அடைந்து

பணிவார் பாராயோ

அடியமர் யரவாய் அலைந்திடும் மனத்தை அடக்கி ஆளாயோ

பொடியுடல் முழுதும் படும்பசு பதியார் இளைமக வானோனே. 2


தடியுடை கிழவா தமிழதன் தலைவா திணைத்தேன் உண்ணாயோ

துடியுடை எழிலாள் தமிழ்மகள் குறத்தி துணையாய் நிற்போனே

படிமுறை எனவே பகுவினை முனிவர் புகழும் செவ்வேளே

விடிகதிர் அனைய வடிவினை உடைய

வனைமக வானோனே 3


குடியுயர் வதற்கே குலமுயர் வதற்கே குறிசெய் கோனோனே.

முடியுயர் முனிவர் மனமுடி யமர்ந்து மதிசெய் ஞானோனே. 

இடியென இறங்கி இருடிகள் படைதான் இலதாய் செய்வோனே

பிடிதுணை முகத்தன் பிரியமுள் குமரா தனிவேல் கொண்டோனே. 4


அடிதொழு மமரர்க் கடுசமர் தொடுத்து

அவுணர் கூறாக

வெடிபடு சுடராய் வெடித்துடன் அவரை அழித்த வாகையே

முடியென அணிந்த முகைமலர் முகத்தால் முருகாய் தோன்றிங்கு

நொடிமிசை வரங்கள் நலமொடு வழங்கும் பழனிச் சேயோனே 5


துடியிடை உடைய தளிர்முகத் தழகை உடைய வேலோனே

பிடிமகள் கரத்தை பரங்கிரி அதனில் 

பிடித்த தேசாகி

நடிப்பொடு இசைக்கும் நடத்தமிழ் தனக்கும் மயங்கும் வேலோனே

படிப்பவர் துதிக்கும் பரத்திரு குமரா குகனே ஈசோனே.. 6


நொடிக்குளே துடிப்பாய் நெருப்பென விளங்காய் விரிந்த பேராற்றல்

கொடியதி லுருவாய் குடிபுகு சவலை அடையாய் கொண்டாயே

மடிமுதல் துணையாய் மதிதர வெனவே மனதில் நின்றாயே

அடிமுதல் முடியாய் அதிபரஞ் சுடராய் விளங்கி நின்றோனே. 7


முடிவதில் துணையாய் மொழியருள் முனிய னெனவே வாராயோ

குடியதில் குகனாய் குறஞ்சியில் திளைத்த குமரக் கோவாகி

துடிக்கிற உயிரை துவதசம் கடத்தி துதிசெய் பேறான

முடியதில் நிறுத்தும் முடிமதன் தலைவா முருகா நீபோதும் 8


அடிக்கிற புயலில் அலைகிற துகளாய் அலைந்து ஓயாது

துடிக்கிற மனதை தடுத்திடை நிறுத்தி தகையாம் போதங்கள்

படிக்கிற நிலையில் படுத்திட வரணும் பரமன் சேயோனே

நடிக்கிற நிகழ்ச்சி நிகழ்வது முடியும் நொடிக்கு நீபோதும். 9


வடிக்கிற விழிகள் வருந்துதல் மறக்க விரைந்து நீவாராய்

செடியதன் உடலாய் செழித்திட இருக்கும் செயலை நீதாராய்

முடிவதில் முழுதும் முடிந்தினிப் பிறவா முறையை நீதாராய்

தடியுடைக் குமரா தனித்துணை யிறைவா நிறைவாய் நீபோதும்.. 10






إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم