நிலையாய் உயிராய் நினைவாய் நிறைவாய்
வலையாய் பிடிக்கும் வினைகள் களைவாய்
விலையாய் எனையே விடுத்தேன் உனக்கே
கலையாய் கருதி களைவாய் வினையே. 1
சிலையாய் பழனி சிகைமேல் அமர்ந்தாய்
தலையாய் அமரர் தனிலே திகழ்ந்தாய்
அலைவாய் அதிலே அமைந்தே அமர்ந்தாய்
தொலைவாய் துரத்து துயரம் தனையே. 2
கொலையாய் பிரிக்கும் கொடுமை தவிர்த்து
உலையாய் கொதிக்கும் உணர்வை தடுத்து
மலையாய் மிகுந்த மனதை ஒடுக்கி
தலையாய் அமர்வாய் தலைவர் தலையே 3
வலையாய் விரிந்தே தலைகொள் தரணிப்
புலைகள் துரத்தி புதிதாய் திருத்தி
மலைகள் மடுவாய் மயங்கும் மனத்தை
நிலையாய் தருவாய் நிமலா குகனே. 4
குலைகொள் விருதாய் குணத்தை தருவாய்
அலைமேல் விழுந்தே அலையும் பொழுதில்
இலைபோல் சருகாய் இலகிக் கடக்கும்
நிலைநீ தருவாய் நிகரில் நிதியே. 5
சலைவாய் சலிக்கும் சதத்துள் ஒருவன்
புலையன் கலையன் புலர்வாய் எனிலே
எலைவாய் வருங்கால் எதிரே வருவாய்
தொலைவாம் நிலைதாத் தொலையா நிலையே 6
விலைகொள் மகளிர் விடுதிச் சரணாய்
நிலைகொள் விதியை நிமலத் தரசே
தலைமேல் அமர்ந்தே தடுத்தே அருள்வாய்
மலைமேல் மலராய் மதியாய் இருந்தே. 7
பலைத்தேன் திணையும் பழமும் விருந்தாய்
மலைத்தேன் முருங்கை முகைத்தேன் படைத்தேன்
நிலைத்தேன் எனவே நினைத்தேன் உனையே
மலைத்தேன் உனையே மனத்தேன் குடுத்தே.. 8
சலைத்தேன் பிறவிச் சரத்தை பிரித்தே
கலைத்தேன் மலராம் கடம்பைப் தொடுத்தேன்
உலைத்தேன் சுவையோய் உனைத்தேன் படுத்தி
தலைக்குள் இருத்தி தனித்தாய் உலகே. 9
மலைத்தான் குடிலாய் முனைத்தாய் புதல்வா
அலைத்தான் பணியும் அலைத்தாய் முருகே
கலைத்தாய் தமிழாள் கனிந்த முதல்வா
நிலைத்தாய் உலகுள் நினைப்பார் மனத்தே. 10
إرسال تعليق