சண்முக சட்கண்டம் - 21 - ஏறுமயில் சீறிவர

 ஏறுமயில் சீறிவர ஏரகனே நேரில்வர ஏதுவினை நான்வருந்த இனிமேலும்

ஊறுயிலை கேடுயிலை பூவுலகில் பாடுமிலை கூடடையும் பட்சியென துதிபாடி

மாறுதலை நானடைய மாறிவருங் காலமதும் மாறனென நான்சுகிக்க இனிதாகி

ஆறுதலை ஆண்டவர்தாம் ஆறுதலை தான்தருவார் ஆறுபடை வீட்டினையே அடைவோமே. 1


பொங்குகடல் வந்துதுதிப் பாடிடவே நாடிடுமே பொங்குகுக பாடிகளின் புகழ்தானே

கங்குசரம் வந்துதித்து கந்தனென குன்றமதில் காவலென நின்றகுக - வடிவோனே

மங்குபனி போலயினி முந்துவினை பிந்துபட முற்றொடுதான் வெட்டிடவே வருவோனே

சங்குகரன் தான்மகிழும் சங்கரத்தார் தன்மகனே செந்திலென  தானமர்ந்த - சிறுவோனே. 2


ஆண்டுபடை ஆறுவுடை ஆறுமுகம் ஆனபொருள் ஆதிசிவன் ஆக்குபொருள்  எனவாகி

பாண்டிநகர் பாடுகின்ற பாவலரின் வேந்தனென பாதமலர் காட்டியரள் தருவோனே

சீண்டுமவு ணர்படையை சீழ்படிய பாழ்படுத்தும் வேல்பிடித்த பால்முகத்தோய் பெருமானே

தூண்டுமொரு தூயதுற வுற்றவர்தம் தோழனென தோன்றுகிற இளையோனே 3



தேடிவருந் தேவதலை மாமயிலாய் கொண்டயிறை தேவபடை தாங்குந்தலை அதிவீரா

ஓடிவரும் ஆழியலை ஓதும்மறை கேட்டுதினம் ஓவியமாய் நிற்கின்ற திருச்செந்தூர்

நாடிவரும் பாவலர்தம் நாவசைக்குள் நின்றழகாய் நாட்டியஞ்செய் நற்றமிழின் முதல்சேயே

கூடிவரும் கூட்டமதில் கோடிமனங் கூறுகுறை கூறுபட செய்பவனே அருட்சோதி. 4


ஊரறிய மாமரத்தை உற்றெரிந்த வேலதனால் ஊழினையும் விட்டெரிய வருவாயே

பாரறிய குன்றதனை ஈறெனவே வெட்டியவா பாலகனே பாரெனையே பெருமானே

ஏரகத்தில் நாதனுக்காய் ஏகனுக்காய் ஏடறியா போதமருள் புரிந்தோனே

நாரணத்தான் பாம்பனையான் நாமகிழ பாடிவர நான்முகனும் போற்றிடவே எழுந்தோனே..5


சீரலைவாய் தானமர்ந்தாய் சீலமொடு தான்திகழ்ந்தாய் சீரமைத்து பாடிடுவேன் அரண்சேயே

வாரணத்தான் தான்மகிழும் வாவியுதி தீஞ்சுடரே வாயெடுத்து பாடிடுவேன் திருவேளே

பூரணத்தாள் தான்பணிந்து பூதியொடு பண்ணிசைத்து பாதமதை பாடிடுவேன் வடிவேலா

ஆரணத்தில் தானிருந்து ஆங்கொரு மான்துரத்தி ராவணனை வென்றவன் மருகோனே 6


ஏமனெனை கொண்டுசெல்ல ஏகிவரும் காலமதில் ஏரகனே நீயிருந்து தடுத்தாள்வாய்

வாமனத்து கோமுகத்தை வாங்கியொரு மாமுகத்தை வைத்திருக்கும் வாவியுதி பாலனேயென்

பாமணக்க பாட்டிசைக்க பாட்டிடையே போற்றிடவே வாவழகே முருகோனே

பூமணத்து பொய்கையதில் பூமியெங்கும் புண்ணியமே தான்நிலைக்க வருவேளே 7


காமனைத்தான் நீறுபட கண்திறந்து தானெரித்த காணவர்தம் கோனவரும் திருவான

நாமமதை கூறுயென நாடகமும் தான்நடத்த நாதனென நின்றருளி மறைஞான

பூமணத்தை வீசுமென பூதளத்தே சூரனவன் பூதவுடல் தான்பிளந்த பெருமானே

ஓமெழுத்தின் சாரமென ஓவியமாய் தான்விளங்கு ஓதவனார் தான்புகழும் பெருமாளே. 8


நாதவிந்து யோகசித்து ஞானவித்து போகமுத்து ஞாலமித்தே என்றெனக்கு அருள்வோனே

போதமுண்டு மோனமதில் பாகமென மூழ்கிடவே பாதமருள் தருவோனே

நாதமொடு கீதமென நாளுமுனை தான்தொழுகும் நாட்டவர்க்கு தானுதவ வருவோனே

வாதமொடு பித்தமொடு சைத்தியமும் சீர்படவே வாசிமுறை தான்மொழிந்த குருவோனே.. 9


இந்துபிறை சிந்துநதி ஈசனவர் சூடியவர்  இன்பமுற வென்றுவரு பரவேளே

கந்தகுக குந்தனென நேசனுனை பாடிடவே கண்டுதமிழ் கொண்டுவர அரும்பாக

வந்தசுடர் வெந்துமலர் மேலிருந்து வாவியதில் தானிருந்து வந்தகுக வடிவேளே

முந்துவினை வெந்துபட காந்தலுடை காந்தனென முக்திதரு மோனமுதற் பெருமாளே.. 10






إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم