ஒரு சொல்

சென்ற பதிவின் முடிவில் கவிதையின் ஒரு சொல் ஒரு கதை சொல்லும் என்றேன். அதைபற்றி இந்த பதிவில் சொல்ல நினைத்தேன் .

கவிதை பெருவெளியில் உலவும் அனைவரும் . பாரதியை அறிந்திருப்பார்.. மகாகவிஎன்பது ஏனென்றால் கவிதையின் அனைத்து  மந்திர ஜாலத்தையும் கையாண்டவன்..

பாரதியின் பாயும்ஔி நீயெனக்கு கவிதையில் இந்த நான்கு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்..

1) எல்லையற்ற பேரழகே
2) மோதுமின்பமே
3) சூறை அமுதே.
4) சேமநிதி.

இந்த நான்கு சொற்கள் ஏன் என்றால்.  இந்த கவிதை பாரதி தன் திறனை எல்லாம் காட்ட வேண்டும் என்றே நினைத்த கவிதை.. இந்த நான்கு சொற்களை சொல்லிவிட்டால் நாம் கவிதையை பார்க்கும் விதம் மாறிவிடும்.

1) எல்லையற்ற பேரழகே. 

   சார் மனைவிய எப்படி வர்ணிப்பீங்க. அழகி. தேர் போல நிலா போல கொடியிடை  மயில் போல பிறையிடை. அன்னநடை . ஆரஞ்சு உதடுனு.. எங்க போனாலும். அத எந்த எல்லைக்குள்ளயாவது நிறுத்திடுவோம். ஆனா பாரதி.  நான் மகாகவிடா. என்று நிலைநிறுத்த பெரிய உருவகம் உவமை எடுக்கவே இல்ல ஒரே வார்த்தை எல்லையற்ற .. நீ என்னவேனா சொல்லு எனக்கு கீழதான். அதிலும். எல்லையற்ற அழகே னு சொல்லிருந்தா. நாம முந்திக்கலாம்னு பேரழகே. அங்கயும் டாப்ல வெச்சிட்டான்..  அவ்வளவு தாங்க அப்படின்னா இல்ல..

பாரதி ஏன் இந்த விசயத்த சொல்லனும் நம்ம கூட போட்டி போடவா. இல்ல.. தன் மனைவி பேச்சு அழகு  நடை அழகு. தீண்டல் அழகு கோபம்அழகு பரிமாறுதல் அழகு. இன்னும் எது செய்தாலும் அழகு.  அப்படி இவ எதுல அழகில்லனே எனக்கு தெரியலப்பா . அவ அழகுக்கு என்னால எல்லை சொல்ல முடியலப்பா . அதான் எல்லையற்ற பேரழகே..

2) மோதுமின்பமே. .

   இன்பம் எப்படி வரும். ஒரு நல்லது நடந்தா , ஆசைபட்டது கிடைச்சா, நினைச்சது நடந்தா., ன்னு பல சொல்லலாம். ஆனா இது எதுலயும் இன்பத்த தொட முடியுமா?. முடியாதே. அப்புறம் எப்படி இன்பம் மோதும்.?.

தன் மனைவி செய்வதில் அனைத்திலும் அவள் இன்பமே தருகிறாள் . காதலில். உதவுதலில்  தன் கொள்கைக்கெல்லாம் இணங்குதலில். என எல்லாவிதத்திலும் இன்பம் தருபவளை இன்பத்தின் வடிவமாக பார்க்கிறான். அதன் வெளிப்பாடே இன்பத்தை தொட என்று இல்லாமல் தானாய் இன்பம் வந்து மோதுகிறது என்று எழுதினார்..

3) சூறை அமுதே..

   இங்க தாங்க பாரதி .. அமுதம் எப்படிபட்டதுனு எல்லாருக்கும் தெரியும். இந்த அமுதம் தனக்கு என்றில்லாமல்.ஊர் கூட்டி அதன் நடுவில் இந்த அமுதத்தை சூறை போட வேண்டும் என்று எண்ணுகிறான். அதாவது அமுதக்கலயத்தை எடுத்து வந்து சூறைதேங்காய் போல உடைப்பது..

இதை ஏன் மனைவியிடம் சேர்க்கிறான்.?.  நான் செல்லும் இடத்தெல்லாம் தானும் தன் சுற்றமும் நலமுற செய்பவள் அமுதமல்லவா. தன் சுற்றத்திற்கும் வந்தவருக்கும் உணவளித்து உயிர் காப்பதால். அமுதை சூறையிட்டு கொடுப்பவள் என்றான்...

4) சேமநிதி..
    இது தாங்க மொத்த கவிதையிலேயே நான் உச்சமென சொல்லும் இடம்.  ஒரு கணவனாக பாரதி தன் மனைவிக்கு சிறப்பான வாழ்க்கையை தரவில்லை என்கிற உள்வருத்தம். அவனுக்குள் இருந்தது.

ஏதோ காரணம் மனைவியிடம் தன்னை தாழ்த்திக் கொள்ள நினைத்தவன் மறைமுகமாக காட்ட நினைக்கிறான். அதற்கு அவன் எடுத்த சொல் சேமநிதி . இயல்பாக சேமநிதி என்பது பொது நன்மைக்காக அதாவது சமூக நன்மைக்காக தரும் நிதி. அதனால் தரும் நபர் பெரிய லாபம் பெற மாட்டார்.. அதுபோல. தன் மனைவி தன்னை ஊருக்கு கொடுத்துவிட்டு எதையும் பெறவில்லை. ஆனால் தான் தந்ததற்கான புண்ணியத்தை அவள் பெறுவாள்என்று சொல்ல அவன் எடுத்த ஓரே சொல்..சேமநிதி..

இது தவிர இந்த சொற்கள் அவன் கற்ற பழங்காலகவிதைகளை காட்டும்அதைபற்றி பிறிதொரு வேளையில் பார்க்கலாம்.

இனி கவிதை என்பது படிமங்களால் ஆனது என்பர்..அதை பற்றி அடு்த்த பதிவில் பார்க்கலாம்..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم