கம்பனுக்கு ஆசான்.

அம்பொன் அணிந்திருக்கும் கம்பனுக்கும் நானாசான்
உம்பொன் விருப்பமிலை எம்மிசைப்பா கேவலமோ..
அம்மை வந்தவனுக்கு அன்னம் கசக்குமாம்
உம்மையென் சொல்வேன் உருப்பட வாய்ப்பிலையே..

செம்மண் களத்திலே வெம்மை வியர்க்குமே
உம்மண் மனத்திலே உம்பா வினிக்குமென்று
எம்மை வசைபாடு எம்முன்ன வாகேட்பாய்
எம்மண்ணா யும்இனிக்கும் என்பா என்பேன்யான்...

உம்பன் நண்பன் கம்பன் தனையே
திம்பன் எம்பன் குடலாற வேளைக்கொருவர்
அம்பொன் என்ன கம்பன் என்னவும்
அம்பை விழுங்குவன் அதையே எரிவன்..

எம்மம்புக்கு நீரிழிவு எம்முன்னே நீர்குறைவு
உம்மக் கவிகம்பன் உள்வந்தால் எம்சீடர்..
எம்மை வெல்வீரோ எப்படி பிழைப்பீரோ
தம்மை இழப்பீர் தவழ்ந்து செலவே..

எழுந்து நடந்தால் என்னையார் தொடுவார்
விழுந்து தவழ்ந்தால் வியக்கியானமோ கிழவரே
தொழுது கிடப்பனென தொல்கனவு கண்டீரோ..
பழுது பார்ப்பனும் பற்களை பார்த்து..

வீறுகொள்ள எமக்கு சீறுதரும் தமிழ்
ஊறுகாயென வெண்ணி ஊறுசெய் யுமும்மை
நூறுகூறாய் நூறுவேன் நூறிதூறுவேன் நற்பாக்கள்
மாறுமும் சிதையெம் கவித்தோட்ட மாயினி..

ஏறுகவி கம்பனுக்கே ஏற்றந்தரும் ஆசான்யான்..



إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم