எழுதப்படாத கவிதைகள் -1:
அறியவியலா அறிஞன் ( கடவுள் வாழ்த்து )
திக்கெட்டும் துளிஎன்ற - துளியனாய்
திசையெல்லாம் அணிஎன்ற - அணியாய்
சூழழும் சூழலே ஆடையாய் - அணிந்தாய்
திகைவெல்லாம் திரட்டிய திகம்பர சொரூபமே!
நீர் கொண்டாய் , நெரல் கொண்டாய்
நிலம் கொண்டாய், நீலவான் கொண்டாய்
ஒளி கொண்டாய் , ஓங்காரம் கொண்டாய்
அருள் கொண்டாய் , அழிவும் கொண்டாய்
உலகு என்றதாய் , உயிர் என்றதாய்
உணர் வென்றதாய் , உண்மை என்றதாய்
ஒளி என்றதாய் , உஷ்ணம் என்றதாய்
உயிராய் உயர்வாய் உள்ளுறைந்த உத்தமமெ!
கடல் தந்தாய் , கலை தந்தாய்
கற்றறிவுடன் களவும் கருணை தந்தாய்
மனம் தந்தாய் , மயக்கம் தந்தாய்
உனதாய் எனதாய் உழன்றழியும் உள்ளம் தந்தாய்!
அன்பாய் அருளாய் அரனாய் துணையாய்
அருகிருக்க அழுது அலைந்து அழைத்தேன்உனை
பண்பாய் பணிவாய் உணர்வாய் உயிராய்
உள்ளிருந்து உழுது உழைத்து வளர்த்தாய்எனை!
இகழ்வார்க்கும் இல்லைஎன் வார்க்கும் அறிவாய்
புகழ்வார்க்கு புகுந்து புணர்ந்த அன்பாய்
எவர்க்கும் அறிந்த அறியவியலா அறிஞனே
உமக்குளடங்கிய பின்நான் என்வேண்டிட சர்வமே!
إرسال تعليق