எழுதப்படாத கவிதைகள் 4: காண்பவை மாயம்

எழுதப்படாத கவிதைகள் 4:
காண்பவை மாயம்


காணும் ஞாலத்தே காண்பவை யாவும் மாயம்

கானல் நீரும், காணும் நீரும் காலங்கடத்தே மாயம்
கண்ணீரும் , கடல் நீரும் கரைந்தபின்னே மாயம்

எண்ணமும் , எள்ளல் நிகழாமட்டும் மாயம்
காயமும், கானமும் காய்ந்துவிட்டால் மாயம்

ஒலியும் ஒளியும்  ஒழிந்தபின்னே மாயம்
பாசமும், நேசமும் பொருளிடத்தே மாயம்

பணிவும், பண்பும் பசியிடத்தே மாயம்
அன்பும் , அறமும் அறிவிடத்து மாயம்

திறனும் தீரமும் ஆணவத்தே மாயம்
துன்பமும் இன்பமும் துணையிடர மாயம்

தாவரமும் தா வரமும் கடல்கதிரிடத்து மாயம்


மாயமும் மாயும் என்பதும் ஒரு பொருள் என்பதால்
 மாயும் என்பதும் இங்கே பொருந்தும் படி 
இருக்கும்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post