எழுதப்படாத கவிதைகள் 6: என் செய்தோம்



எழுதப்படாத கவிதைகள் 6: என் செய்தோம்

என் செய்தோம் மனிதனாகி மனதிலாகி மரணதிட 
மரணதிட பிறந்தோம் என்கிலும் என் செய்தோம்

என் செய்தோம் உயிர்களில் உயர்வாய் உருவாகி
உருவாகி குருவாகிட உண்மையில் என் செய்தோம்


என் செய்தோம் உணர்விர்க்கும் அறிவிர்க்கும் இனம்காண
இனம்காண வேண்டி சுயநலம் பெற்று என் செய்தோம்

என் செய்தோம் நான் ஒழிந்து நாமாகிட
நாமாகிட வேண்டிய வேலைகள் என் செய்தோம்

என் செய்தோம் குழந்தைபோல் வாழ .மறந்தோம்
மறந்தோம் இன்பம் என்பதுஉணர என் செய்தோம்

என் செய்தோம் இறைவா உனைஅறியாது போக
போக போக எல்லாம் போக என் செய்தோம்


என் செய்தோம் இறைவா நீ விளையாட்டாய் ஆட்டிவைக்க
ஆட்டிவைக்க ஆடியதுஅன்றி தவறென்று என் செய்தோம்

என் செய்தோம் இறைவா யாதுமாய் நீ என்றால்
என்றால் பாவமாய் யாம் என் செய்தோம்

என் செய்தோம் கடவுளே நீதான் கொடுத்தமனம்
கொடுத்தமனம் உனைமறந்தால் நாங்கள் என் செய்தோம்

என் செய்தோம் இறைவா ஒளிமறைந்து ஒழிந்தோம்
ஒழிந்தோம் முடிந்தோம்என்றிருக்க மீண்டும்பிறக்க என் செய்தோம்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post