அறிவொளியில் சில கிறுக்கல்கள் 2: இறைவா நீயும் தவறே
கதிர் தோன்றிமறைய
கடும் உழைப்பால் கரைந்தவன்
கலைநிலா பொழுதில்
கடும் துயர்கொண்டால்
இறைவா நீயும் தவறே
ஈஸல்எறும்புக்கும்
வேளைதவறாது அமுதளிக்கும் உனக்கு
பல நாள்பட்டினி கிடப்போறை
காண பொழுததில்லை - என்றால்
இறைவா நீயும் தவறே
விரதம் பூண்டால்
வரம் தருவாய் என்றால்
மாதகணக்கில் விரதம் கிடப்போறுக்கு
ஒருவேளை உணவும் கிடைக்கவில்லை - என்றால்
இறைவா நீயும் தவறே
கலகம் செய்வோரை
பிரதிநிதியாய் கொண்டாய்
கவலை கொண்டோரை
பிரதிநிதம் கண்டாயோ - அல்லேல்
இறைவா நீயும் தவறே
உப்பிட்டவரை உள்ளவரை நினை
அமுதிட்டவரை ஆண்டவனாய் நினை
படையல் கொண்டு பிரததனை
கொன்று கொண்ட பரிவினை
மறந்து கலக ப்ரயத்தனை - செய்தால்
இறைவா நீயும் தவறே
Post a Comment