மகாகவி மீண்டும் வந்தால்

மாகவிஞன் மாத்திரம் மீண்டும் வந்தால்
மாத்திரையில் கவிதை எழுதுவான்....


சூரிய சந்திரனை கண்ணில் கண்டவன்.
சூனிய உள்ளத்தையும் கண்டிருப்பான்...


ஏட்டில் படித்தவன் - இன்று 
நெட்டில் படித்திடுவான்




கிண்டலாய் பாடியதை - இன்று
கிண்டிலிலே பதிவிடுவான்...


தான் அறிந்த பதினொரு மொழிகடந்து
தரணி எங்கும் தமிழ் போல் இனிதில்லை என்பான்...


தான் பாடிய புதுமைப்பெண்ணை
தானே கண்ணாற கண்டிருப்பான்


விடுதலைக்கு பாடியவன் - இன்றோ
விடியலுக்கு பாடுவான்

குடிவாழ பாடியவன் தான் - இன்றோ
குடி கெடுக்கும் குடி கண்டு கண்ணீர் சிந்துவான்


புதுக்கவிதையின் பிரம்மா அவன் - இன்றைய
ஹைக்கூவால் சிதிலமடைந்த தமிழை சீர்படுத்துவான்..


சுயஆட்சியே லாபமென்றவனோ - இன்று
சுயட்சியிலும் லாபமென்பான்


வெற்றி வேண்டி கொக்கரித்தவன் - இன்றோ
வெற்றிக்கும் வெட்ட வேண்டியதை பாடுவான்...


அலைகளின் ஐலதரங்கம் பாடியவன்- இன்றைய தேதியில்
அலைபேசியில் அவன்கவிதை பாடுவான்


குருவிக்கூட்டில் போர்முழக்கத்தை கொக்கரிப்பவனா கவிஞன்?
காகமுட்டைக்குள் ஔிந்திருக்கும் குயிலிசைக்கும் மொழி புனைந்தவன்..


மயிலிறகு குட்டியிடுமென புத்தககூட்டில் மறைப்பதற்க்கா கவிஞன்?
பணமூட்டைகளை பதுக்கும் சமூகத்தை சாடி சாட்டை எடுப்பவன் அவன்


இந்த நூற்றாண்டின் கனவுகள் அவனுக்கு இருந்தது
இன்றைய சமூகத்தின்மீது அக்கறையும் கூட இருந்தது


துன்பங்கள் வாட்டிடும்போது சிரிப்பதற்கா கவிஞன்?
துன்புறுத்தியவர்கள் துவண்டுவிடும் கேடயம் அவன்

எண்ணியதை சூசகமாய் சொல்வதற்க்கா  கவிஞன்?
அலங்கார சூத்திரம் விடுத்த அவசிய சூட்சமம் அவன்


நட்சித்திரங்களை பாடி களைத்தவன் கவிஞன் - இன்றுள்ள
அறுபதுகோடி நட்சத்திரங்களை ரசிப்பதற்காகவாவது வரட்டுமே


கறக்காத பாலின் தூய்மை போல
சுறக்காத தேனின் இனிமை போல
திறக்காத காட்டின் பசுமை போல
எழுதாத கவிதைகளை எழுதிடவாவது வரட்டுமே...


கைத்தடி பிடித்த கவிஞரெல்லாம்
அவன் இளமைக்கு அடிமையானபின்
நான்மட்டும் விதிவிலக்கா என்ன
இளமையாகத்தான் வரட்டுமே
இளமைக்காகதான் வரட்டுமே


அடுக்கடுக்காய் காரணம் சொல்ல
ஆசை எனக்கு சொல்லவோ? சொன்னால்
அடுத்தடுத்து தலைவர்கள் பட்டியல் நீளுமே - நீளட்டுமே
அதற்கும் என்னிடம் தமிழுண்டு திறனும் உண்டு


சென்றவன் வரப்போவதில்லை
வந்தால் நானும் கவிஞனில்லை - ஒருவேளை
நிகழ்ந்தால் தமிழுக்கு வாழ்வு  - அல்லேல்
நிகழாவிடின் எனக்கு வாழ்வு....

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم