கடவுள் என்பதென்ன? -1- மூளை


கடவுள் என்பதென்ன?

முதலில் எங்கிருந்து ஆரம்பிக்கலாம்.. அகத்திலிருந்தா அல்லது வெளியுலகத்திலிருந்தா? என்று யோசித்து பின்னர் வெளியுலக பரப்பை சொல்லும் முன் அகம் சிறிது என்று அகத்தில் துவங்க முடிவெடுத்தேன்...

அகத்தில் எங்கு துவங்குவது மூளையிலிருந்தா ? மனதிலிருந்தா? என்று என் மூளையை கேட்டபோது... மூளை மனதை சொன்னது மனம் மூளையை சொன்னது.. இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக ஆராயபோவது தான்...

முதலில் மூளைக்கே செல்வோம்.. கடவுளின் திறமாக மூளையை சொல்லலாம்... எத்தனை யோசிக்கிறது.. எவ்வளவு ஞாபகம் வைத்துக் கொள்கிறது.. அதன் ஆக்கம் எத்தனை அரிது தெரியுமோ... சுமார் ஒரு பதினைந்து நண்பர்களை ஓர் வரிசையில் அடக்கி ஆாள்வது எத்தனை சிரமம்.. ஆனால் மூளையோ தன் கோடிக்கணக்கான நியூரான் கட்டமைப்புகளை ஒரே சீராக கிட்டதட்ட மிக வளர்ந்த ராணுவம் போல கட்டுபடுத்தி ஆள்கிறது...

கருவிலிருக்கும் குழந்தையின் மூளை 5-8 மாதங்களில் படிப்படியாக வளரும் அந்த வளர்ச்சியில் ஏதேனும் குறைபட்டால் அக்குழந்தை மூளைவளர்ச்சியானது தடைபடுகிறது... இதை பற்றி நீயா நானா வில் கூட ஒரு நிகழ்ச்சியுண்டு...

சரி மூளை எப்படி கடவுளாகும் என்பதுதானே நமது தேடல் .. பார்க்கலாம் வாருங்கள்...

முதலில் எல்லையற்ற தன்மை மூளைக்கு அளவு ஒன்றுதான் ஆனால் அதன் ஆற்றலுக்கு எல்லை என்பது இதுவரை வரையறுக்கபட முடியாதாகவே உள்ளது..

நியூட்டனின் (நியூட்டனுக்கானு தெரியல ஆனா நிகழ்வு உண்மை ) மூளையை சோதித்த மருத்துவர்கள் அவர் தனது மூளையை 2% தான் பயன்படுத்தியதாக ஆச்சர்ய தகவல் ஒன்றை வெளியிட்டனர்...

இரண்டாவது மேன்மை..மூளை எப்போதும் மேன்மை தன்மையை தாங்கியுள்ளது... அதன் ஞானம் வாழ்வை செம்மைபடுத்துதல் போன்றன...

மூன்றாவது சக்தி ... முதல் நிலை அதாவது எளிதில் மறக்க கூடிய ஞாபகம்... உதாரணமாக.. கடந்த வருடம் ஐம்பத்து ஒன்றாவது சனிக்கிழமை என்ன செய்தீர்கள் என்று பட்டியலிட்டு பாருங்கள் ... ஐந்து விசயங்கள் இருந்தாலே அபூர்வம்....  இரண்டாம் நிலை அதாவது நீண்ட நாள் ஞாபகம் பெரும்பாலும் எந்த நோயும் தாக்காதவரை (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்னு இல்லாம) .. உதாரணம்.. உங்கள் பெயர் ... உங்கள் விருப்ப உணவு போன்றன...

நான்காவது கட்டுபாட்டு திறன்...
மூளைக்கு இந்த தலைப்ப விளக்கவே தேவையில்ல கண் காது கை கால் அசைவு என அனைத்தும் கட்டுபடுத்துகிறது....

ஐந்தாவது (கொஞ்சம் முக்கியம்) பிரம்மம்...
இந்த பிரம்மம் என்பதே பல்வேறு குணங்களில் கூட்டணி தான்.. குறிப்பா  சித்தி .. சூட்சமம் ... சங்கல்பம் போன்றன...
மூளைக்கு சித்தியுண்டு அருகே இருக்கும் ஆற்றலோடு ஒன்றுபடும்... ஆனால் தன்னிலை மாறாது... கெமிக்கல் மாற்றங்களால் திரிந்தாலும் தன்னுடைய இயல்பான நிலைக்கு வர முயற்சி செய்தல். ஆக...

சூட்சமம்.. அதாவது அதன் ஆக்கத்தின் வரையறையை விவரிக்க முடியாதது. ஆம் நம் மூளையின் உறுப்புகளில் சிறிதளவே நாம் அறிவோம் நாம் அறியா எண்ணற்ற சுரபிகள்.. வேதிப்பொருள்கள்... உட்பொருள்கள் எனவே விளக்கவியலா ரகசியங்கள் சில லட்சங்கோடி உள்ளது...

சங்கல்பம்... இது சுயமாக சிந்தித்தல்... கற்பனை செய்தல்... கனவு காணுதல் போன்ற செயல்கள்..

நிகழ்வுகள்....

கடவுளின்  செயல் வகைகள்...

காத்தல் . அழித்தல். படைத்தல் முதலியன மூளைக்கும்  பொருந்துகிறதே....

(தேடல்கள் தொடரும்....)

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post