ஏன் என் முன் வந்து தொலைகிறாய்....

ஏன் என் முன் வந்து தொலைகிறாய்....
மீண்டும் என் கண்ணில் பட்டுவிடாதே...

என் முளையின் காதல் சுரபிகள்..
உன்னை படமெடுப்பதற்குள் மறைந்துவிடு...

எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை என்பதுபோல்...
என்னில் தமிழன்றி வேறு மொழிகள் இல்லை...

முட்டாள் பெண்ணே இவ்வுலகம் என்னை மூடனாய் பார்க்கிறது...
முரடன் நான் உனனை பாவமென்று கண்ணியம் காக்கிறேன்..

என் உடலின் ஜீன்களின் தைமசைன் மூலக்கூறுகள் காதல் சுரக்க துவங்கிவிட்டன...





எங்கேயாவது போய்விட்டு நல்லபடியாய் வாழ்...
நீ நினைக்கிறாய் ... உண்மைதான்
நான் ஏதும் அறியாதவன் தான்..


நான் சில நுட்பங்களை கேள்விபட்டு வைத்திருக்கிறேன்.. அதன்
ஆய்வுகூடமாய் நீவந்து மாட்டிகொள்ளாதே...

செந்நிறம் கொண்டதால் அழகென்றில்லை  உன் செழுமையும் இல்லை...
நின்திறம் கண்டதால் சொல்கிறேன்..
என்னை காதலித்து வீணாய் போகாதே..


எப்படியும் நான் வருவேன் காத்திரு என்று சொல்ல மாட்டேன்...
எப்போதும் தீராது என் சுமைகள்..
காத்திருப்பது மூடத்தனம்..

கடந்துசெல்வது உனக்கு மூலதனம்...
செல் .. உன் திருமணப்பரிசாய்...
என் சில ஆசிகள் ஏந்திய இதயம் வரும்...

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS