மிருகவதை தவறென்று
மோகவதை செயுமுனை
யோகவதை செய்து - காமத்தீ கொண்டு
யாகமதை செய்வேன்..
நெளியும் புழுவாய்
வளியின் துகளாய்
அலையவிட்ட பின்னே - பெண்ணே
உனை தீண்டுவதற்கு யோசிப்பேன்..
எனக்குள்ளிருக்கும் பிரபஞ்சம்
உனக்குள்ளும் பிரபஞ்சமாக
உன்னிலென்னை உரசி - பெண்ணே
நம்மில் ஒரு பிரளயம் செய்வேன்..
என்னில் இல்லா பெண்மையை
உன்னில் உள்ள மென்மையை
உன்வரமாய் உலக தன்மையை
சின்னதாய் ஒரு தேடல் செய்வேன்...
சதைகொண்ட மலைபிரதேசத்தில்
சைலமாகிய பள்ளதாக்கில்
சிலகாலம் உள்ளதவிப்பில்
சிறைவாசம் செய்வதாய் உறங்குவேனடி..
வியர்க்கும் பாகமெங்கும் புதுநதியடி
வியக்கும் வகைச்சதை கடல்நீயடி
விறைக்கும் குளிரில் உறையும்
தகிக்கும் நிலையில் கொதிக்கும்
நீரின் குணம் உனதடி
மலைவளையும் நதியென வளைவுகள்
கலைகுழையும் கதியென வியர்வைகள்
மாலைவெயில் தீண்டும் நீர் நீயடி
மலைகுழைத்து கலைசெய்யும் சிற்பிநானடி...
கொழுசொலி எனக்கு கொடுங்கோல் ஆட்சியடி..
கொழுப்பேறிய உனக்கு கொள்ளுபோல் புரட்சிநானடி...
கொழுத்த செல்வம் கொள்கைஎன்று சொல்லுதடி - என்
கொள்கை கொண்டே கொன்று தள்ளுதடி....
إرسال تعليق