மரபில் ஈசன்

திருவவன் எம்மீசனே சுகந்தரும் முக்தி யுந்தரும் பெரியோன் கபில மலர்போல என்னுள் மலர்ந்த இறைவனாம்.

உருவலான் இச்சிவனே பாருளும் ஏனுள்ளும் உறையோன் பனியிற் குளிராய் உவக்கும் சோதியனாம்..

அருவமாய் இருப்பனே புல்லுளும் பூடுளும் உயிரோன் தீயிற் பிளம்பாய் சிவக்கும் கரியனாம்..

எதுவுமாய் இருப்பினும் அதுவுளும் புறமென விரிந்தோன் அண்ட சூன்யமாய் விரித்தும் அரியனாம்..

ஆதியுமாய் அழிவிலா சோதியுமாய் நீதியுமாய் தெரிவோன் நேரிய அன்பினிற்கு அடியினும் அடியனாம்

பாதியுமை கொண்டினும் மலைசடை திருவதை மாறோன் சீரிய தாளத்தே தாண்டவனாம்

தீதிருள் ஆட்டினும் தீயெனவே தூயொளி சிந்தெமை காப்போன் ஆதுள அண்டத்தோர்கு அரியோனாம்..

நாவுளல் பாடினார்க் குள்ளேறி நாவிசை நாதமாய் நிற்பான் அன்புள நாம்தொழ நல்தரு நாதனாம்..

சீலரும் சீதமுள நோயரும் நேயமுடன் வேண்டிட நோயறு நேயனாய் ஊழறுத் தாள்வனாம்..

மலைமகள் துணையுடை பிறையணி
சடையுடை பெரியவான் நீலம் தின்ற கடலடி கண்டனாம்..

உமையவன் உளமுறை போலவன் யாவர்க்கும் உள்ளுறை உயர்வுடை உயிரென உள்ளோனாம்...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post