அன்பே வணங்குவர்க்கு அமுதே அண்டமே.
ஆதியே யாமுள்ளுறை ஆத்மனே ஆனந்தமே
இன்பமே அடிபணிவோர்கு இறையே இயலிசையே
ஈசனே நாள்வாழ் ஈசலுக்கும் ஈற்றே
உண்மையே உள்ளுறை உயிரே உலகே.
ஊக்கமே அடியார்கருள் ஊற்றே ஊனே
எல்லோனே எமைக்காக்கும் எம்பிரான் எந்தையே
ஏகனே அனேக ஏடறியவிலா ஏகாம்பரனே
ஐயமே பிறர்கொள் ஐயத்திற்கும் ஐயனே.
ஒத்தனே பிறிதொன்றிணையிலா ஒரானே ஒப்பிலானே
ஓமே பிரஞ்சத்தின் ஓட்டமே ஓங்காரமே
ஓளவைக்கு இறையே ஓளவன் ஓளசதமே
ஃகண்ணே இவ் ஃகுந்தன் ஃகெனும் முக்கண்ணே ...
Post a Comment