அன்புடன் அன்னை ஊட்டும் பிடிசோறும்
அங்கொரு உழவன் கொடுத்ததாம்.
ஆழவிதைத்த அவன் வியர்வை சாறும்
அத்தனை பருக்கிலும் உளதாம்.
இம்மண்ணை சேறாக்கி பயிறாக்கி உணவாக்கும்
இணையிலா பணிச் செய்வனாம்.
ஈற்றுள பயிருளும் ஈரமதை சேர்க்கும்
ஈசனிவன் செயலும் சேவையாம்.
உயிருள யாவுமே உறவென போற்றிடும்
உழவனவன் பாடுதான் பெரியதாம்.
ஊற்று கைகூடினால் .
ஊருதான் புகழுமே.
ஊழிவந்து அழுகினால்
ஊக்கந்தான் ஏதிங்கே.
எத்தனையோ சிரமம் வந்தும் துவளுறோம்
எந்தபுயல் வந்தபோதும் வருதுனாலும் நடுங்குறோம்
எங்கதுயர் தீர்க்கயிங்க யாருக்குமே நேரமில்ல.
ஏழுகடல் தாண்டினாலும் ஏழபசி தீராதோ
ஏறுமுகம் தேடிபார்த்தா ஏதும்கண்ணு காணாதோ
ஏட்டு கல்விகேட்டுங்கூட ஏதுமிங்க மாறல
நல்லிரவில் மழைவந்தா நெஞ்சுகூட்டில் இடியிறங்கும்
நாளைகாலை விடியலிலே நெற்பயிரு அழுகிருக்கும்.
நாடுமதை கண்டுகாது நேரம்கூட மிஞ்சிருக்காது
வயலெனும் சேற்றினிலே வளமதை சேர்த்தவன்
வானமழை ஊற்றிட நாளுமதை கேட்டவன் - உழவன்
Post a Comment