சென்ரியு செய்வது எப்படி.

சென்ரியு .

ஹைக்கூவை போல இதுவும் ஜப்பானிய கவிதை வடிவம். ஒருவகையில் ஹைக்கூவின் ஒட்டிப்பிறந்த சகோதரன் என்றும் சொல்லலாம். மாற்றான் பட இரண்டு சூர்யாவை போல. ஒருவன்  கலீல் ஜிப்ரானிடம் உருகும் போது மற்றவர் சப்பவிசயம் டா என்பது போலதான் இவை இரண்டும்..

ஹைக்கூவை விட சென்ரியுவிற்கு ரசிகர்கூட்டம் அதிகம். காரணம் ஒரு சென்றியு என்பது கிட்டதட்ட ஹைக்கூவே ஆயினும். குமுத்தின் ஆறு வித்தியாசங்கள் போல  இதற்கும் சில  உண்டு.

ஹைக்கூ துளியும் கற்பனை உருவகம் இல்லாத தட்ஸ் த பாயிண்ட் போன்றது.

சென்றியு கற்பனைக்கும் உருவகத்திற்கும் தடையிடுவதில்லை.

ஹைக்கூ இயற்கையை சொல்லி மறைமுகமாக ஒரு வாழ்வியலின் தத்துவத்தை சொல்ல வேண்டும்.

சென்ரியு நேரடியாக வாழ்வியலை சொல்ல முடியும். தத்துவங்களுக்கு அவசியங்கள் இல்லை.

ஹைக்கூ ஒரு உணர்வையோ சிந்தனையையோ தூண்ட வேண்டும் .

சென்ரியு ஒருவித எள்ளல் நக்கல் நையாண்டி கிண்டல் வருத்தம் போன்ற ஒன்றை உள்ளூடே வைத்திருக்க வேண்டும்..

இப்போது தெரிகிறதா ஏன் சென்ரியு அத்தனை பிரபலம்னு..

ஆண்டுகள் ஆயிரம் தாண்டி ஆக்கங்கள் பலவற்றை தாங்கியும் ஆழபரந்த தமிழுக்கு மேலும் ஒரு புதுவரவு சென்ரியு.

பொதுவிதிகள்:
   3 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்..

  6-9 வார்த்தைகள் இருத்தல் நன்று.

இலக்கியம் அரசியல். சாலையோர நிகழ்வுகள் என எதையும் கவிதைபொருளாக ஏற்கலாம்.

கலாய்த்தல் போல ஒருவித நகைச்சுவை உணர்வை வெளிபடு்த்தும் படி இருத்தல் சிறப்பு.

எடுத்துகாட்டு:
             இரண்டு அணியாம்
             இரண்டும் இப்போது ஓரணியாம்
              எப்படி இந்த விளையாட்டு..

ஆற்றில் குடிபுகுவராம்
மலையை சூறையாடுவராம் பிறகு
ஐயோ மழைவெள்ளம் என்று ஓடுவராம்.

இறுதியாக , எச்சரிக்கை ஒன்றும் இருக்கிறது. காய்ச்சல் போல சென்ரியுவும் தொற்றிக்கொள்ளுமாம். பொறாமை இன்றி வஞ்சனை இன்றி சொல்லிக்கொடுக்கலாம்..

நன்றி....

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post