தமிழிற்கு திருப்புகழ்

தண்டையணி பாடல் கொண்டு

சிந்துகவி வெண்கலிச் சந்தமுள நற்கமழ் செவ்வமுத சிந்தமுச் - சங்கத்தோளே

நோந்துதனை நெய்தவர் செல்வமதை எய்திடச் செய்தவொரு செம்மொழிச் - தெய்வமேயென்

சிந்தையினை வென்றவள் வண்ணமய வண்டிவள் எண்ணமுய வந்தவள் - செந்தழல்தான்

சுட்டதொரு பொன்னிவள் வட்டமதி வெண்முகம் சுட்டெரியு தண்கதிர் - எம்முயிர்தான்

தொட்டதொரு நுண்ணியத் தொன்மயிள வெண்பனிப் புன்னகையிற்  பொன்னிறப்- பொன்நகைப்போல்

மின்னிடியு மென்தமிழ் பொய்கையினி லம்புவில் எய்திவிடத் தொய்வெனும் - நல்லியல்பால்

மெய்யெழுத தென்றலென் றென்றுயிரெ ழுத்திணைத் தந்ததொரு செந்தழலில் - என்தமிழமுதே.


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم