எட்டடி நாற்சீர் கலிப்பா..

மார்கழி மாதத்தை யாம்
மிகுந்து கொண்டாடுகிறோம்
சீர்கலி சிந்தும் காதலை - என்றன்
சிறந்த தமிழ் கொண்டமையால்
ஊர்மகளீர் தாமுமே - விரும்பி
உவந்து கொண்டாடலால்..



எட்டடி நாற்சீர் கலிப்பா..

கோன்கதையும் பேசிநல்லல் வேளையுமே சென்றதுமோ
வான்வெளியும் நீரணிந்து வெண்ணிறமாய் மாறிடகாண்
தான்மயங்கி கண்ணுறங்கும் மெல்லியளீர் எழும்பீர்
தேன்மதுர தேவனவன் செந்நிறத்தை பாடுதோம்
வான்பெரிதாய் தூண்பெரிதாய் வாழியவர் நன்மனத்தே
தேன்துளியாய் தெய்வமாய் நின்றருளும் நாயகனின்
மான்மழுவும் தீச்சுடரும் ஏந்தியநல் கூர்மதியை
தான்விரும்பி சூடியவன் தாளதனை ஏத்துவோமே...


பால்தருகும் நற்பசுக்கள் மத்தியில் ஓன்றாய்
பால்மனம் வீசிடும்நம் கண்ணனவன் லீலைபாடி
வால்குரங்காய் நெஞ்சமது பாயுமிருள் நீங்கிற்று
வேல்விழிமீர் யாழ்குரலீர் கோபியர்போல் நீங்களும்
மால்வரும் பொய்கையில் நீராட கண்மலர்வீர்
தோல்கருத்த  கண்ணனெழில் புன்னகையாற் துஞ்சலின்றி
நால்வகை நோயுற்று நாளுமிடை தேய்ந்திட
கால்நகை தன்னையிடை பூண்டீரோ ரெம்பாவாய்..



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post