நயனம் விரும்பும் நயமுற ஆடிடும் - நடனரசே
நவதுளை மேனியிற் நடமிடும் நாதன் - நடனரசே
நஞ்சுண் டமரர் நலம்பெற செய்த - நடனரசே
நம்மை புரிகும் நல்லோன் நீயே - நடனரசே.
மயங்கும் நல்லிசை மனிதசாம் பல்பூசும் - மங்களமே
மனதில் நிலைகொள் மழுவதை ஏந்திடம் - மங்களமே
மருவும் மாறாதும் மந்திரத்தில் உறையும் - மங்களமே
மகிமை நிறைந்த மகேசன் அம்மையொடு - மங்களமே..
சிரசில் கங்கை சிவமே சுயம்பாய் - சிவபரமே
சிந்தை தனிலுள் சிறப்புற் றமுதே - சிவபரமே
சிகையிற் பிறையும் சிகரமதி லுறையும் - சிவபரமே
சிற்றம் பலமே சிவனடி யார்க்கு - சிவபரமே.
வாசியாய் வந்தெம்முள் வாசம் புரியும் - வாசியமே
வாழுமுறை தந்தாடும் வாயுலிங் கமாயனே - வாசியமே
வாதவூர் அடியனுக்கு வாரியருள் தந்திட்ட - வாசியமே
வாசம்செய் யும்இசை வாசிப்பின் நேசனே -வாசியமே.
யாழிசை விரும்பும் யாம்பாட கேட்கும் - யாவுமாயுள்
யாசித்தும் அடியவர் யாரும் துன்புறாது - யாவுமாயுள்
யாக்கை உடைதலை யாயெனுள் உறைந்திடும் - யாவுமாயுள்
யாண்டும் இடும்பை யானும் கடந்திடவே - யாவுமாயுள்.
பஞ்சாட்சரனுக்கு ஜந்து சீருள வெளிவிருத்தம் ஐந்து பாக்களுடன் பாவென்றின் முதலெழுத்தை சீராக கொண்டு நமசிவாயா என்று வரும்படி அமைத்தது.. நம இசையாகும் சி சப்தமிழந்து வாயா இசையாகும். ஆகவே சி பாவில் இசையிலாது அமைத்தேன்..
Post a Comment