மனிதர்கள் இவர்கள்..

ஆம் இது சில சிறுகதைகளின் தொகுப்புதான். என் வாழ்வில் ஏன் நம் வாழ்வில் நிதமும் நமையும் நாமும் சந்திக்கும் மனிதர்களில்  சிலரை இங்கே பொதுவியலாக காட்டபோகிறோம். பார்க்கபோகிறோம்.

இந்தியா என்கிற தேசத்தின் மிகபெரிய சொத்தே இங்கு வீதிதோரும் வாரி இறைக்கப்பட்டுள்ள நிம்மதிதான். அரசியல் சிக்கல்களும் இயற்கை பாதிப்புகளும் பேரிடர்களும் விருந்தாளிகளாக தங்கியிருக்கும் இந்த தேசத்தில் நொடிக்கூட இந்நிம்மதி அழியாதிருக்கும் மாயத்தை யாருமே இன்னும் கண்டறிகிலர்.

அத்தகு நிம்மதியினை நித்தம் நித்தம் வாரித்தரும் நம் கண்களிலயே சுழலும் சில விளம்பரமற்ற மாந்தர்கள் இவர்கள்.

தன்னிறைவும் தயையும் ஏனைய நாட்டில் நிரம்பினும்.. வேதங்கள் உபநிசதங்கள் போன்றவை கேள்விகூட படாத மனிதர்களிடத்திலும் சில அறங்கள் தர்மங்கள் மேலோங்கி நின்றன அப்படி பட்ட மனிதர்களில் சிலர் இங்கு நாம் பார்க்கிறோம். என் வாழ்வில் பார்த்தவை. மனிதநேயம் அழியும் இந்த காலத்தின் எதிர்காலத்தில் பேருதவியாகுமென விழைகிறேன்..

அதுவே சாரமாய் கொண்டு வந்தது இத்தொடரை

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post