.
#பல்குண_ஒப்புயர்வு_மொழிதல்
தூர்எடுப்பான் சூழலினை தூய்மை படுத்துவான்
ஊர்காப்பான் பிறர்க்கேதான் ஊனுழைப்பான் சோறிடுவான்
நார்மலர் சூடிடா நாமெலாம் அறிந்திடா
ஊர்சேவ ரெல்லாம் உமைபாகத் தோனே...
#கலிவிருத்தம்.
எந்த தொழிலாளிய எடுக்குறதுனு குழப்பம் வந்துச்சு.. ஆதான் எல்லாரையும் சொல்லிட்டேன்..
#விளக்கம் ..
தூர்எடுப்பான் - ஆழ் மனதை ஆழ உழுது உள்ளழுக்கு நீக்குவான் ஈசன்..
சூழலினை தூய்மை படுத்துவான்.. - பற்றி அழுதால். நம் சிந்தை அமர்ந்து புவியினில் இன்பம் சொறிந்து.. அப்பழுக்கில்லாத அடியவர் தொகையுள் வைப்பான்.. (மாணிக்கவாசகர் சீரூருவாய சிவ பெருமானே உம் அடியவர் தொகை நடுவே. ஓருருவாய் வை என்று வே்டுவார் )
ஊர்காப்பான் - உலகனைத்திற்கும் அவனே கூர்கா.. ஊர்கா.
பிறர்கே ஊனுழைப்பான் - அடியவர்க்காக . மண் சுமப்பான்.. பிச்சை எடுப்பான் .. யாவும் (உள்குத்து என்பவர்க்கு அதுவே ) செய்வான். அடியவர் ஒருவர் வேண்டிட வேதியர் நாயகர் வேசியர் வீட்டிற்கு அழைத்து போனார்...
சோறிடுவான் - சொல்லனும் அவசியம் இல்ல.. ஈசல் எறும்புக்கும் அமுதளித்தவன்..
நார்மலர் சூடிடா.. - மலர் சூடி சபை அமராதவன்.. ( நாயனார் ஒருவர் திருமணச் சாட்சியாய் நிற்க சொல்லி.வேண்ட.. தன் காளை வாகனத்தை மேடையாக தன் தோளிருந்த கொன்றை மாலையை தந்து திருமணத்தை கீழ் நின்று செய்து வைத்தான். ஆதி அண்ணாமலையில்.. கொன்றை யணிந்த நாயனார் என்கிற கதையிது.. )
இன்னும் நாம் அறிந்திடா..
ஊருக்கு சேவை செய்பவரெல்லாம் உமையினை ஒரு பாகம் கொண்ட சிவனே...
----------------------------------$$$$$$$$$-------
Post a Comment