சமீபத்தில் இணையவெளியில் உலாவும் ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது.. மலப்புரத்தில் ஒரு கர்பிணி யானையை அண்ணாச்சி பழத்தில் வெடிவைத்து கொன்ற செய்தி... அந்த செய்தி தந்த சிந்தனைகள்.
உயிரினங்கள் அனைத்தும் மனிதனோடு ஒட்டி வாழத்தான் விரும்புகிறது. ஆனால் மனிதன் அப்படியல்ல..
வேட்டையாடுவது என்பது மரபின் வீரத்தின் அடையாளமாக பார்க்கபட்டத மனிதயீனம்..
நாகரீகங்கள் வளர்ந்த நாள் தொட்டே கருணையும் வேட்டையாடுவதும் தொடர்ந்துவந்தது தான்.. எந்த காட்டு விலங்கையும் நாம் அத்தனை எளிதாக ஏற்பதில்லை..
ஆனால் இயல்பாகவே எல்லோருக்கும் யானைகள் மீது ஒரு தொன்றுதொட்ட பாசம் இருக்கும். அதற்கு காரணம் மற்ற விலங்குகளை விட யானை மனிதனை அதிகம் நேசித்தது . ஏன் அரசுகள் முதற்கொண்டு அடிப்படை மனிதன் வரை அனைவருக்கும் சங்க காலத்தில் யானையோடு தொடர்பிருந்தது..
1870 வரையிலும் யானை வீட்டு விலங்காகவே இருந்தது . தமிழரின் மதக்கோட்பாடு என்பதன் சின்னமாக யானை திகழ்ந்தது.. முன்னோர்கள் யானைகளை கொண்டாடினார்கள். அதற்கு சங்க இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் நிறைய சான்றுகள் வைத்திருக்கிறது.
யானைக்குத்தான் மனிதநேயத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளத் தெரியும் என்கிறது வட ஜெர்மனியின் ஒரு பல்கலைகழகத்தின் ஒரு ஆய்வு கட்டுரை..
இந்த நிகழ்வும் அதைத்தான் காட்டுகிறது. யானை உணவுக்காகவே ஊருக்குள் நுழைந்திருக்கிறது. . அது அப்போதும் மனிதனை நம்பித்தான் அந்த பழத்தை உண்டது. வாயில் வெடிப்பினால் ஏற்பட்ட வலியிலேயே ஊருக்குள் சுற்றியிருக்கிறது . அந்த வழியிலும் அது எவரையும் எந்தபொருளையும் தாக்கவில்லை. அப்போதும் அது ஒரு மனிதனின் உதவியையே தேடுகிறது. வலிக்காக எரிச்சலுக்காக தண்ணீர் ஆற்றில் இறங்கி பின் இறந்தும் போனது...
ஒரு தாயாக தன் கருவிற்கு பசிக்கு உதவி கேட்டு வந்த ஒரு நிலத்தின் பெரிய உயிரை அநியாயமாக கொன்றவன் மனிதன். அந்த யானை மட்டும் நினைத்திருந்தால் நம்மிடம் இருந்து உணவை பறித்திருக்க முடியும். அது மனிதனை நேசித்தது மனிதனை நம்பியது.. ஒரு வாயுறை கொடுப்பது பெரும் புண்ணியம் என்கிறது திருமந்திரம்.
இந்த வலியை மனிதன் உணரமாட்டான்.. நதியில் நின்றதால் நுரையீரல் முழுக்க நீரால் நிரம்பும் போது மூச்சுவிட மிகவும் சிரமமாக இருந்திருக்கும் . அந்த வலியை தாங்கிக் கொண்டு நின்றதென்றால் மனிதன் தந்த வலி எத்தனை பெரியதாக இருந்திருக்கும். அந்த நம்பிக்கை துரோகம் எவ்வளவு பாதித்திருக்கும். இங்கு வெடி வைத்தவன் மட்டும் குற்றமுடையவன் அல்ல வலியில் திரிந்த யானைக்கு மருத்துவ உதவி செய்யாதவனும் குற்றமுடையவன் தான். மனிதன் உயிரினங்களை விட்டு வெகுதூரம் விலகிவிட்டான் என்பது இதிலிருந்து புரிகிறது..
ஆம் மனிதன் தவறானவன். இயற்கை மனிதனை படைத்தது தவறு.. பசிக்கு கையேந்தும் அத்தனை உயிரும் மனிதனை கடவுளாகத்தான் பார்க்கின்றன. உணவு உயிரினங்களின் உரிமை . மனிதன் அவைகளை அவைகளின் தேவையிலிருந்து அன்னியமாக்கி அழிக்கின்றான்..
மனிதனுக்குள் எப்போதும் குரூரம் நிறைந்திருக்கும் . அது பெரும்பாலும் உயிரினங்கள் மீது செயல்படும் மாட்டின் வாலில் பட்டாசு கட்டிவிடுவது. நாயின் வாயில் கல்லை போட்டுவிடுவது. போன்ற கீழ்தரமான குரூரங்கள் நிறைந்தவன் மனிதன்.. இது அவன் பிறவிகுணம். இருந்தும் அவனை உயிரினங்கள் தன் அரசனாக கடவுளாக பார்க்கின்றன. ஆனால் மனிதன் தவறானவன்.
யானைக்கு மட்டுமல்ல இவன் சக மனிதனுக்கும் தவறானவன்... உலகின் கொடிய நோய் பசி . உயிரினங்கள் அந்த நோய்க்கான மருத்துவனாக மனிதனைத்தான் பார்க்கின்றன.. கரம் கொடுங்கள் உயிரினங்கள் உங்களை கடவுளாக்கிவிடும்..
ஆனால் மனிதன் தவறானவன். அந்த விதியை மாற்றுவது ஒவ்வொரு தனி மனிதனின் கையிலும் இருக்கிறது.. மாற்றப்படுமா? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது..
Voice over courtesy: Muthaiah Thasan
إرسال تعليق