வழு என்பது ஒருவரின் மேல் ஏற்பட்டட மதிப்பால் அவர் அறியாமல் செய்த பிழையினை ஏற்றுகொள்வதாகும்.. எல்லா மொழிகளிலும் இந்த வகையுண்டு.. எனினும் தமிழ் அதற்கொரு இலக்கணமே தருகிறது..
ஒரு குழந்தை தாயிடம் பேசுகையில் அதன் வார்்தைகள் சரியான பொருளில் அமைவதில்லை. எனினும் தாய் பொருளை புரிந்துகொள்கிறாள்.. அதுபோல் நமக்கு பொருள் புரிந்துவிட்ட படியால் அவர் பிழையை சரிவிடு என்பது போல் விடுவது வழு என்கிறது தமிழ்..
அந்த வழு 7 வகை என்றும் சொல்கிறது தமிழ்..
திணை , காலம் , இடம் , பால் , மரபு, வினா , விடை..
அம்மா பசு மாடு வந்தாங்க..
மாடு அஃறிணை அதற்கு உயர்திணை வினைமுற்று கொடுத்தது #திணைவழு..
இன்னைக்கு சாயங்காலம் வந்துட்டேன்..
சாயங்காலம் வருவேன்னு சொல்வதற்கு வந்துட்டேன்னு இறந்த கால வினைமுற்று சொல்வது #காலவழு..
நான் நீங்கள் அவர்கள் என்னும் குறிப்படத்தில்..
நீங்கள் சாப்பிட்டேன் ..
சாப்பிட்டீர் என்பதற்கு மாறாக சாப்பிட்டேன் என்பது இடத்தின் மாறிய வினைமுற்று .. என்பதால் இடவழு..
இது போல வழுவினை ஏற்பதற்கு ஒரு சமாதானம் வைத்து அதற்கு வழுவமைதி என்றும் வைத்த மொழி..
தாய் என்பதர்க்கே உண்டான குணம் பொறுப்பும். பொருமையும்.. தாய்மொழிக்கும் உண்டானது.. வியப்பே..
இரண்டு ஏகாரம் பற்றி அறிந்து கொள்ளலாம்..
ஏ என்பது அட்சரங்கில் அதாவது எழுத்துக்களில் ஒன்று.. மொழியில்அது பல்வேறு முறையில் பயன்பட்டாலும். வினையுறுதி எனப்படும் இலக்கணப்படி உறுதிபடுத்தும் சொற்களை குறைக்கும் பணி செய்கிறது.
ஒன்று குறிப்பு ஏகாரம்..
எங்கள் விழாவிற்கு முதல்வரே வந்திருந்தார்..
எங்கள் விழாவிற்கு முதல்வரே வந்திருந்தார்..
இங்கு வந்தவர்களில் உயர்வானவரைச் சொலகிறது.. என்றாலும்.. விழா நடத்துபவரின் உயர்வினை குறிக்கிறது.. அதாவது
அவர் மிகவும் உயர்ந்த மனிதர்.. பெருமதிப்பிற்குரியவர்.. என்பதை..
முதல்வரே வந்து சந்திக்கும் அளவிற்கான ஆள்.. என்று சொல்லி விடலாம்.. அங்கு அந்த ஏ நபரின் உயர்வினை காட்டும் கருவியாகிறது..
#உறுதி_ஏகாரம் / தேற்றேகாரம்..
நடப்பவைகள் எல்லாவற்றிற்கும் இறைவனே காரணம்..
நடப்பவைகள் எல்லாவற்றிற்கும் இறைவனே காரணம்..
இங்கு மற்றவர்கள் யாருமில்லை முழு பொறுப்பும் இறைவனை சேரும் என்பதை இந்த ஏகாரம் காட்டுகிறது.. இது உறுதி ஏகாரம் என்பர். இலக்கணம்இதை தேற்றம் என்கிறது..
மொழி வாழ்வாதாரம்.. மொழி அழியும்போதே.. மொழிக்கூட்டங்கள் .. மொழிசார்ந்த வாழ்க்கை அழிகிறது.. மொழி ஒருவனின் அடையாளம்.. வாழ்வாதாரம்.. அதனை இழக்கும் போது.. ஒருவன் தன் சுதந்திரத்தை இழக்கிறான்..
إرسال تعليق