சிவ விருத்தம்


#ஒன்பதுசீர்_கழிநெடிலடி_ஆசிரிய_விருத்தம் 

வாய்பாடு நானே வெச்சிக்கிட்டேன் ... 

மா மா காய்  ~மா மா காய் ~மா மா காய்

ஆற்றேன் அப்பா அன்புருவாய் ~ஆன உன்னை அகன்றிங்கு ~ ஆற்றேன் நின்னை பிரிந்திடவே
மாற்றேன் சிந்தை மற்றுமொரு ~ மாயத் துள்ளே மாட்டிடாது  ~ மாற்றாய் உன்னை வைத்திடவே
கூற்றும் வந்து கொல்லுங்கால் ~ கூற்றை எத்துங் கொற்றவனே ~ கூட்டாய் உன்னை வைத்தேன்நான்
போற்றும் தீராப் பெருமையன்உன் ~ பேரை துதித்து பேரின்பம் ~ பெற்றேன் உன்னைப் பெற்றேனே.. 

வேண்டும் அடியார் வினைகொன்று~ வினையோர்க் கறம்செய் வித்தகனே ~ விரும்பி உள்ளம் வைத்தேனே
ஆண்டும் அழித்தும் அறங்காக்கும் ~ ஆரன் அப்பன் ஆரூரன் ~ ஆடும் கழலில் பணிந்தேனே
மாண்டு மாண்டு மீண்டிங்கு ~ மற்றும் பிறவி மாளாதே ~ முற்றும் முறித்து முக்திசேர்தான்
ஈண்டு இங்கு இறையென ~ ஈனர் வீணர்க் கெல்லாம்தான்~ ஈடு இணையில் ஈடே


#பதினாரு_சீர்_விருத்தம்

வாய்பாடு 'திருவலங்கற்றிரட்டு ' என்னும் நூலில் எடுத்தது... திரு - அலங்கற்று - திரட்டு.. 

புளிமா புளிமா விளம் விளம் மா மா விளம் மா
மா மா விளம் விளம் மாமா விளம் மா

ஒருகால் அசைக்க ஓர்வெளிப் பிறந்திட ஔியாய் நின்ற ஒருபெரும் சோதி
~ ஒன்றாய் நின்றாய் ஒலியென வெளியென ஒற்றைச் சுடராய் படர்ந்தருள்  இறையே
திருவார் தலைவா திகம்பரத் தரசனே திங்கள் சூடி திரிபுரம் சுட்டு
~ தன்னை தந்து அடியவர்க் கடியென காத்து சிந்தை நெறிபட அருள்வாய்
குருவாய் மரத்தே கருணையை தருமருட் கடலே பரமே கருத்தென நின்றக் 
~ கிரியோய் மலையோய் கயிலையின் தலைமகட் கரியோய் பெரியோய் குடந்தையின் நாதா
விருதா சலத்தே விருத்தனே மருவிலா விருந்தே மயக்கும் வித்தகச் சிவனே
~ வித்தே பற்றை விடவதற் குற்றவா விமலா நொடியில் விடைவருச் சிவனே.. 


1 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post