முருக மாலை..

பா 1

மா கூவிளம் கூவிளம் கூவிளம்

தேசன் பிள்ளையே தெய்வானை கேள்வனே
   ~ தேவர் சேனையோன் தெய்வச் செந்திலோய்
நேசன் நெஞ்சினில் நின்றாடும் வேலவன்
~ நேயர் தன்பங்கன் நம்மவன் நாதனன்
காசில் குன்றவன் கூற்றினில் செந்தமிழ்
~ காக்கும் கந்தவேள் காந்தளன் சூழலன்
மாசில் ஒப்பிலான்  மின்னொளி மேனியன்
~ மண்ணில் உய்யவே மானடி போற்றினனே..

- கட்டளைக் கலிப்பா..

பா 2

போற்றினனே இன்பத்துள் புக்கிட வேலனை
ஏற்றினனே சிந்தையில் ஏறி யபின்
பாடினனே பார்போற்றும் பேரழகன் கந்தனை
நாடினனே நம்முருகன் தாள்.

- இன்னிசை வெண்பா

பா 3

தாள்பணிந்து துவங்க தகருமே செருக்கும்
தோள்தந்து உதவ தோன்றுக குமரனும்
வேல்தந்து போக்கிடும் வேதனையும்
வேந்தனாம் உலகின் வேலாயுதன் துனணயாமே

- நேரிசை ஆசிரியப்பா
பா 4
துணையாமே துன்பத்துள் தத்தளிப் போர்க்கு
துணையாமே பேராற்றல் தான்பெறு வோர்க்கு
துணையாமே ஞானத்தை தேடிடு வோர்க்கு
துணையாமே மெய்யொன்று தோன்றிடத் தானே..

- விருத்தம்.. வாய்பாடு - காய் காய் விளம் மா..

பா 5
துணையாமே துன்பத்துள் துன்புற்றோர்க் குத்தனித்
துணையாமே வீரர்க்கு தூய்நெறி யாளரின்
துணையாமே ஞாலத்தில் தாராள ஞானியர்
துணையாமே வாழ்க்கைக்கு தண்டபாணித் தன்மயில்..

#விருத்தம்..
வாய்பாடு - காய் காய் காய் விளம்.

பா 6- இ்ன்னிசை வெண்பா..

மயிலோடு வேலும் மடக்கிய கையில்
உயிர்துணை யாய்எழில் உற்சவம் கொண்(டு)
கொடிசேவல் கைக்கொண்ட கொன்றையோன் மைந்தனை
அடிசேர காட்டுவோம் அன்பு

பா 7- நேரிசை ஆசிரியப்பா
அன்பின் எல்லையே அப்பனே ஆசானே
அன்னையும் நீயே அடைக்கலம் புகுந்தேனே
தடைகளும்  தோன்றும் தன்னிடமே
தடைகளைத் தகர்த்து தன்வினை அறுப்பானே

மணிமாறன் கதிரேசன்

பா 8 - விருத்தம்
வாய்பாடு -புளிமாங்காய் தேமா கருவிளங்காய் தேமா

அறுப்பானே தாம்பை அறுமுகன்தன் வேலால்
சிறுகையில் தண்டும் சிரமாறு கொண்டும்
வறுமைக்கு தீர்வாய் வறியவர்க்கு நேராய்
பொறுமைக்கு குன்றாய் பெருங்குணத்து வேளே..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post