francis kiruba - பிரான்சிஸ் கிருபா

ப்ரான்சிஸ் கிருபா..

இந்த நவீன கவிஞன் ஓர் எழுத்தாளன்..சொற்களின் கூட்டுக்குள் புதைந்து கிடக்கும் முத்து..  கொஞ்சம் சிறப்பானவன்.. ஆனந்த விகடனின் ஆசை நாயகன்.. உயிர்மையின் உள்ளத்தவன்..

இவன் நிழலன்றி ஏதுமற்றவன் எனினும் கவிதை வானில் ஏழுவால் நட்சத்திரம்..

இந்த கவிஞனின் சிக்னல் - சிந்தனை . ஓர் இலையுதிர் காலத்து விடியற்காலை ஔி..

இவர் வரிகளில் நிமிரும் இறந்த காலம் - ஔிரும் நிகழ்காலம் - மிளிரும் எதிர்காலம் இவரது சொல்லெல்லாம் சமுகத்தின் மீது வீசப்படும் கல்லின் குரல் அது தொனிக்கும் போதெல்லாம் ஒரு ஜனனம்..

சுஜாதா விருது பெற்றவர்..நெய்தல் விருதும் பெற்றவர்.. உமது கவிதைகள் பொய்யறியாதவை.. இவர் தோன்றும் நாளெல்லாம் மல்லிகைக் கிழமைகள்..

புல்லின் பச்சை கொத்தி கிளிக்கு பறக்கும் நேசன்.. கற்பனை நதியை கொட்டிக் கவிழ்த்தவர்.. வாழ்வெனும் எழுதுகோலின்றி எழுதும் மகாகாவியத்தில் ஒருதுளி பாத்திரம்..

கைநீட்டி கைநீட்டிப் பிடித்தாய் காலத்தின் மனதை .. எங்கள் கவிப்போமின் மனதை இலவச இணைப்பாய் பெற்றாய்.. ஆதலால் காதல் செய்கிறோம்.. நீ வீசிய சொற்கள் மேகத்தை தாண்டியதும் விண்மீன்களாயின..

உம் தேடலின் முடிவு வெற்றியாகட்டும் . மௌனக்கனவுகள் சுவடு பதிக்கட்டும் .. கன்னிப் புதினம் பருவங்கள் கடக்கட்டும்.. இந்த சிற்பின் சித்திரம் வானவில் தாவரங்கள் ஆகட்டும்.. உம் வலியோடு முறியும் மின்னல்கள் இனிய  இடிகள் முழக்கட்டும்.. அந்த மெசியாவின் காயங்கள் மெல்ல ஆறட்டும்..

இவர் இங்கு வந்தது நமக்கு அடைமழையின் மகிழ்ச்சி.. நாளும் நட்போடும் நன்றியோடும் வாழ்த்தி வரவேற்கிறது நம் கவிப்போம்..


0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS