விண்ணாளும் பூதம்நீ வேதங்கள் ஐந்தும்நீ
மண்ணோடு நீரும்நீ மாகன்தீ ஆகாயம்
எண்ணைந்து கொண்டாய்நீ என்னையும் கொண்டாய்நீ
எண்ணங்கள் யாவும்நீ ஏகத்தோன் நீயே.
தோன்றாத தோழன்நீ தோற்றார்க்கும் தோல்வியும்நீ
வான்தானாய் நின்றாய்நீ வானார்க்கும் மூலன்நீ
நான்தான்நாம் யாவும்நீ நாதன்நீ நல்லன்நீ
மான்கைதான் பஞ்சன்நீ மூன்றாம்கண் கொண்டாய்நீ..
அட்டத்தோன் தேவன்நீ வட்டத்தை தந்தோன்நீ
மட்டத்தில் மட்டம்நீ மாதர்க்கு மாதன்நீ
சிட்டர்க்கு சீலன்நீ சிந்தைக்கும் சீவன்நீ
முட்டைக்குள் வைத்திட்டு முக்திக்குள் நின்றாயே..
மானேந்தி மழுவேந்தி மாணார்க்கு குருவாகி
வானேந்தி விடையேறி வீணாகும் தினமாகி
إرسال تعليق