சிக்மண்ட் ப்ராய்டை

மையில்லாத போனாவை தந்தாள்
மைப்பூசிய விழிகளை கொண்டு கவிதை செய்தேன்.

வெற்றுக் காகிதம் தந்தாள்
வெள்ளை மனமென புகழ்ந்தேன்.

தூரத்து நிலவை வானவில்லை காட்டினாள்
வசந்தங்களை விரும்புகிறாள் என்று எண்ணினேன்.

ஓடும் நதியில் கைகளை நனைத்தாள்
ஓவியம் செய்ய விரும்புகிறாள் என்றேன்.

பென்சில் சீவி கூந்தலை கோதினாள்
இளமையை நேசிக்கிறாய் என்றேன்..

சரி நீபோய் கவிதை செய் என்றாள்.
உன் காதலை சொல்கிறாய் என்றேன்.

ச்சே.  இனியேனு் சிக்மண்ட் ப்ராய்டை வாசிக்காதே.. என்றது

அவளிடம் சென்ற என்றன் மனம்..

#காதல் கவிதையானு சொல்லுங்க பாக்கலாம்.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم