சண்முக சட்கண்டம் - 6 - புகழும் பதிகம்

அறுவா முருகா அமரா குமரா
மறுவா எழிலா மலைவாழ் குறவா
வறுவா வினைகள் விலகும் குருவாய்
முறுவல் புரிகும் முருகத் தரசே. 1

வெளியாய் விரிந்தாய் விழியுள் குழைந்த
ஔியாய் தெரிந்தாய் ஒருமால் பொழுதில்
களியாய் விளைந்தாய் கவிதைப் புனைவாய்
உளியாய் செதுக்கி உலகம் படைத்தே. 2

மலிவாம் உலக மயத்துள் மயங்கி
கலியால் மருக கரமே கொடுத்து
ஒலியாய் உணரா ஔியாய் பரவி
வலிவாழ் வறுத்த வளவன் குமரா. 3

பதமாய் பதிகம் படைத்தே பணிய
இதமாய் இதயத் திருந்து அருள
சதமாய் கலந்து சதகம் பிறந்து
விதமாய் வளரும் விருத்தம் உனதே.. 4

விழியில் ததும்பி வழியும் சுரப்பை
மொழியில் வகுக்க முடியா தெனக்கே
அழிவில் இனிமை அளித்தே துதிப்பார்
செழிவாய் சிறக்க செயலே புரிக..5

வசனம் அதனால் விளக்க முடியா
ரசனை மிகுத்த ரசத்தை நிறைத்து
விசனம் விலக விரதம் இதுவாய்
அசபை புரிவார்க் கசைவாய் குகனே. 6

மதிவான் திகழும் மதனம் நடத்தும்
நதிகால் பிடித்து நகர்வார் தமக்கு
விதிகால் வடித்த வினைதான் விலக்கி
கதிதான் தருவாய் கயிலைக் கரசே.7

வெற்றி விளைந்து வெறுமை மறைய
குற்றம் குறைந்து குணங்கள் பெருக
கொற்றம் புரிவாய் கொடிக்கோல் உடையாய்
பற்றும் அடியார் பணியாள் எனவே. 8

சற்றும் தளரா சித்தம் தருவாய்
பற்றுப் படரா பக்கம் வருவாய்
கற்றக் கருத்தாம் கட்டுள் அடங்கா
பெற்றன் குகன்நீ புத்தி எனவே 9

முற்றும் மறந்த முனிவர்க் கிணையாய்
கற்றும் மறந்த கயவர்க் கிணையாய்
பெற்றும் மறந்த பிதார்த்தற் கிணையாய்
விற்றே பிறந்த விதியை அறுத்தாள். 10


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم