ஒரு கவிதை என்ன செய்யும்?

ஒரு கவிதை என்ன செய்யும்? 


பால்வெளித் தொட்டிலில் படர்கிற உயிர்களை

பார்க்காமலேயே தடவி விடும். - இருந்தவிடத்தே

ஆல்மரத்தடியில் ஊஞ்சல் செய்து தரும்..  - விண்கலமின்றி

நிலவில் வீடுசெய்து ஒருயுகம் வாழச்செய்யும்..


எப்போதோ நட்ட மரத்தின் மலர்களை

அவ்வப்போது கையில் கொண்டு தரும்.  - சிலநேரம்

காகித்திற்குள் கானகத்தை காட்சி காட்டும்

பூவுலகில் கொஞ்ச நேரம் புதுமைகாட்டும் - ஒருவேளை

உணவாகும் பசிநேரம் அமுதாகும் விருந்தாகும் 


நினைத்தாலே நினைவூரும் அணைக்காமல் அனைத்தாளும்

எலிசபத்தையும் ஏழையாக்கும் அரைக்கிறுக்கனையும் ஐன்ஸ்டீனாக்கும்..  - பித்தாகிப் 

பின்சென்றால் போதியாகி புத்தனாக்கும் இல்லையேல்

புத்தனையே உங்கள் பக்தனாக்கும்  - கவிதை.. 


எழுதப்படும் மந்திரக்கோல்  சுவைதீர ருசிப்பார்க்கு

மன்மதனின் அம்பாகும் மனமாற சுகிப்போர்க்கு - போர்வைதரும்

குளிராகும் எங்கிருந்தோ நமைப்பார்த்து கண்சிமிட்டும் 

விண்மீனுக்கு இங்கிருந்தே நாம் செய்யும் பரிபாஷையே கவிதை..


தென்றலுக்குள் சூரியனையும் எரிமலைக்குள் மல்லிகையையும் வைத்துவிட்டு சிரிக்கும் குழந்தை கவிதை.. 

காமம் தொட்டுவிடா இடத்தை எட்டிநலம் செய்யும். கவிதை.. 







Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post