இல்லறவியல் - புகழ்

வாழ்தலில் முக்கிய பயன் புகழ் பெறுவது தான் அது குறித்து வள்ளுவ பேராசான் விளக்கம் செய்கிறார். 


231. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.

உரை: தான் செய்வது உலகம் முன்னேற ஏற்றவாறுை வாழ்வது இவையின்றி உயிர்க்கு ஒரு ஊதியம்(கூலி) இல்லை


232. உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.

உரை: அறங்களை உருவகித்து விளக்கி செல்லுபவர் செல்லுவதெல்லாம் யாசகம் கேட்பார்க்கு தருபவர் மீது நிற்கும் புகழைதான்.. 


233. ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.

உரை : ஒன்றில்லாது பலவான உலகத்தில் உயர்ந்தது புகழ் மட்டும் தான் காரணம் அதற்கே அழியாது நிற்கும் தன்மை உண்டு..


234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.

உரை : நிலைத்து நிலவுகிற நீண்ட புகழை கவிதை செய்யாவிடின் புலவரை ஏழுலகமும் மதிக்காது. 


235. நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

உரை: உடலை நீர்போல் உளதாக்கி புகழை நிலைபெற செய்து சாவாது வாழும் சாவும் முறை அறிந்த வித்தகர்க்கு இன்றி மற்றவர்க்கு அரிது..


236. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

உரை: உலகம் முன் உயர்ந்து தோன்ற வேண்டுமானால் புகழோடு தோன்றுக இல்லையேல் தோன்றாததே நல்லது. 


237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.

உரை : புகழோடு வாழாதவர் தன்னை தானே நொந்து கொள்வர் அப்படியிருக்க. அவனை இகழ்வாரை எப்படி அவன் நொந்து கொள்வது .

238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

உரை : புகழ் பெறாதது உலகத்தில் எல்லோருக்கும் இழிவு. 


239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

உரை : புகழ் பெறாதவரை சுமந்த நிலமும் விளச்சலில் குறைபடும்..


240. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

உரை: புகழோடு வாழ்தலே வாழக்கை மற்றவை வாழ்க்கை அல்ல..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post