பூமி, பல்வேறு உயிரினங்களை உள்ளடக்கி சுழல்கின்ற பெரும் பந்து. அது செய்த தவறே மனித இனத்தை வளரவிட்டதுதான் . அப்படி விட்டதற்கு பரிசாய் அறிவியலும் விஞ்ஞானமும் பிறந்தது. நாத்திகத்தின் நியாயத்தை நிரூபிக்க , ஆஸ்திக்கதின் அஸ்திவாரத்தை கிளரியது. அதன்வழி யுகங்களும் பிரளய பிரபஞ்சங்களும் , இயங்கும் சூட்சமத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தனா் விஞ்ஞானிகள் . அத்தோடு நிற்காமல் அறிந்த சூட்சமத்தை நிகழ்த்தி சோதிக்க ஆசைபட்டனா்.
பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்க நினைத்தனா் ; அதற்கான சோதனை கூடத்தை பூம்திய ரேகையின் மத்திய பகுதியில் வைத்தனா். சூட்சமபடி மாபெரும் அணு வெடிப்பு நிகழவேண்டும் . ஆகையால் யுரேனிய நியூக்கிளியஸ்ஐ ஹக்செனிய காத்தோட் கொடியுடன் மோத செய்தனா் . விளைவாக பூமியே சீா்குழைந்து போனது [ எப்படியானது என்று பின்னாடி சொல்றேன் ] . எனவே தப்பாகியதி்ல் தப்பிய மனிதா்கள் வேறு வழியின்றி பரந்த விண்வெளியில் குடிபெயா்ந்தனா்.
விண்வெளியிலேயே குடியோியதால் விண்வெளி ஆராய்ச்சி இலகுவானது. அங்கு கண்டங்கள் இல்லை ; மொத்த மொழிகளையும் பெயா்த்துவிட்டு ஆங்கிலம் பொது மொழியானது. கிரக நிகா் என்ற சொல் 16 இலக்கங்களை கொண்ட இடக்குறியீடாக பயன்படுத்தபடுகிறது. வாகனங்களுக்கு டாக்கியான் டிஸ்ப்லெசா் என்ஐின் கொண்ட லோக்கல் சிப் பயன்படுகிறது. இப்போது இருக்கும் GPS வசதியெல்லாம் சென்னால் அடிவயிறு தொியும்படி வாய் பிளப்பாா்கள் . அங்க அதற்கு பதில் வியாபித்து இருப்பதெல்லாம் mapscape ; auto drive mode technology [ maps cape - என்பது
இருக்கும் பாதைகள் எல்லாம் சேமித்து வைத்த சிப்க்களும் , சென்சார்களும் தான். கிகநிகா் குறியீட்டை கொடுத்தால் அதுவே போகும்]
நம்ம ஊா் சப்வே மாதிாி மூடய சானல் வழியாகதான் பாதைகள் இருக்கும் . அதுல Inter Galaxy Route Channel மட்டும் லண்டன் ப்ரிட்ஐ் மாதிாி வலையும் தன்மையுடையது.
கிரகம் குறுக்க வந்தா நகா்ந்து கொள்ளும்.
ITSRO - international technical & space research organisation என்ற
ஒரு பொதுவியல் கழகம். விண்வெளி பற்றியும் அதனை சாா்ந்த இதர பல விசயங்களையும் ஆராயும் நிறுவனம். அந்த குழுவின் விவரப்படி இதுவரை மொத்தம் 7 காலக்சிகள்அதாவது அண்டங்கள் கண்டறியபட்டது . அவை வாிசைபடி;
1) பால்வெளி அண்டம்
2) ஆன்ட்ரமீடா அண்டம்
3) மெய்வெளி அண்டம்
4) மத்தியச அண்டம்
5) நோவா அண்டம்
6) ரெமிடீயா அண்டம்
7) துச அண்டம்
இந்த பேரண்ட்டத்தில் இந்த அமைப்பின் பல்வேறு பிரிவுகள் வெவ்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் செய்து வருகிறது.
அவற்றுள் கிரகங்களை கண்டறிந்து அதன் சூழலை பற்றி ஆய்வு நடத்தும் பிரிவினில் [planetation section] உள்ள கபிலன் & விமலன் குழுவாக இணைந்து மெய்வெளி அண்டத்தின் அப்பால் கடந்து [ இதுவரை ITSRO மெய்வெளி அண்டம் வரை தான் கிரக ஆராய்ச்சி பண்றாங்க] துஸ அண்டம் உள்ளே ஒரு கிரகத்தை கண்டறிந்தனர். அதற்கு டூரோ என்று பெயர் வைத்தனர். தக்க ஆதாரங்களுடன் இதிஸ்றோ தலைமையாகத்தில் சமர்ப்பித்தனர் , அதன் மூலம் பெரும் புகழடைந்தனர். மேலும் அவர்களுக்கு தகுந்த ஒரு குழுவை தேர்வு செய்து வாகனத்தையும் தயார் செய்து டூரோ கிரகம் சென்று ஆராய அனுமதியும் பெற்றனர் கபிலும் , விமலும்.
ஆனந்த களிப்பில் மிதந்த இருவரும் மழைதூர வந்த கார்மேகம் காற்று அடித்து திரும்பியது போல் அடுத்த கட்ட வேலைக்கு திரும்பினார்.
எழுத்துகள் அருமை அண்ணா...... தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்
ردحذفإرسال تعليق