எழுதப்படாத கவிதைகள் -2:
ஞான பிரச்சார யத்
பிரளயம் பெற்ற பிரபஞ்சத்தில்
பிரியம் பெற்ற மனிதனே - கேள்
நம்மிடையில் ஏழுமை மிகுதியாம்
கடல் ஏழு கண்டம் ஏழு கிரகமும் ஏழெ!
ஏழ்கிரகத்தின் ஒருமையே நாமாகிறோம்
இந்திரியங்கள் ஏழு நம்மில்உண்டாம்! - கேள்
நமக்குள் ஐந்தும் மிகுதியாம்
பூதமைந்து பொருளைந்து பூமியும் ஐந்தே!
பூதமைந்தும் பொருளியணத்தே மனிதஉடலாம்
பொருளைந்தும் பொருந்திய உடலும் நமதே! - கேள்
நம்மில் நுன்மங்கள் பலவாம்
நாற்கோடி நுன்மங்கள் நாமாம்!
நுன்மதின் நுட்பமே செயலாம்
செயலும் நுட்பமே நிகழ்வாம்! - கேள்
பிறந்த நீயும் பிரபஞ்சமே
அதிர்வினில் நீயும் சூட்சமமே!
உன்னை அறிவதே உலகம்
உண்மை அறிவதே ஞானம்! - ஞான பிரச்சார யத்
Post a Comment