எழுதப்படாத கவிதைகள் 5: தமிழக்கினியே

எழுதப்படாத கவிதைகள் 5: தமிழக்கினியே

ஆயிரம் சூரியன் உதிக்கட்டும்
அத்தனை கதிர்களும்எனை எரிக்கட்டும்
கருகிய சாம்பலாயினும் புழுதியில் கரைந்து
புவியர் செவிக்குள் புகுந்தேனும் புகழ்
தமிழ் பாடும் உறுதியுண்டு எனக்கு



அந்தம் யாவையும், பிண்டம் ஆகுமே
அது நாள்வரை பொறும் பெரும் தமிழே
அகிலம் அழிந்தும் அப்பன் சடையன் - காப்பான்உனை
அல்லேல் சுப்பன் தமிழன் தருவான் தயையெ
அக்காலம் வரும்வரை அப்பாவி நான்
வாழ்த்த வாழவாய் தமிழே!

யுகம்தோறும் புதிதாய் புதுமையான பதுமையே
மனம்தோறும் கனிந்தாய் உணார்வான பாவையே
உயிரெழுத்துக்கள் வாய்திறக்கும், உடற்கூட்டின்உள் மெய்யொலிக்கும்
உதிரத்தின் உஷ்ணமாய், உள்ளுறையும் தமிழக்கினியே!

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post