நான்...

காலம் என் எழுதுகோல்
ஞாலம் என் காகிதம்
பிரஞ்ச கவிஞன் நானே...


காணா கிரகமெல்லாம் வாசிக்கும்
வார்த்தைக்குள் வாழும் நான் விதைத்த விதை..
முளைக்கும் கிளைக்கும் புதியதோர் கவிதையாய்...


மாளா காவியமாய் காக்கபடும்
மூளா போராய் போற்றபடும்






சிகரங்கள் எல்லாம் எனது தொடர்பு புள்ளிகள்...
நிலவுகள் எல்லாம் என் சிற்றிலக்கியங்கள்..


சரித்திரம் அல்ல நான் சூத்திரம்..
சரீரம் அல்ல நாம் சூட்சமம்..


சாதனையின் சாகாவரம்..
சாலையில் பூத்தமரம்...


சறுகுகள் சேர்ந்த குருகு நான்..
சாரல் வீசிய குற்றாலம் நான்....

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم