திருக்காணற் பதிகம்

1- குன்றினை யொத்த குழல்முடி கொண்டனை
குன்றிலா நன்றும் குழவும் முகத்தோனை
குன்றதன் மேலே குடிகொண்ட ஈசரை
குன்றிடா தன்பால் குறையுடையான் கண்டேனே.
- கலிவிருத்தம்.

2- கண்டேன் முடியுறை கங்கையும் சந்திரனும்
கண்டேன் திருநீறும் கண்மூன்றும் புன்னகையும்
கண்டேன் திருநீல கண்டமும் நாகமும்
கண்டனன் கொன்றை மலர்சூட னையானே
-கலிவிருத்தம்.

3- மலர்சூடர் தம்மொரு மருங்கில் சூலம்
    மலர்சூடர் தம்மிட மருங்கில் உமையும்
     மலர்சூடர் தம்மெழில் மங்கை உடனும்
     மலர்சூடர் நன்மை அருளிட கண்டேனே
- நிலைமண்டில ஆசிரியப்பா

4- வார் குடிகொண்ட மாலன் இலட்சுமி
     வார் கடைந்த வானவர் தம்மையும்
      வார் கடந்த வானரன் தானொருங்கு
       வார் அமைந்த வாரினை கண்டேனே
-- நிலைமண்டில ஆசிரியப்பா

 5- கண்ணெல்லாம் ஈசறென கண்கள் பனித்திட
எண்ணிலா ஏகனென எண்ணம் மிளிர்ந்திட
விண்ணின்ற சோதியாய் விண்ணார் தலையெனும்
எண்ணாகா சித்தனின் எண்ணைந்தை கண்டனே
- கலிவிருத்தம்

6- காழ்போல் சுழன்றிடு கால்கொண்டு ஆடினானை
யாழ்போல் இசைந்திட்டு யாசகம் கேட்டானை
தாழ்போல் புவியினை தானின்று காத்தானை
வாழ்நாள் அதனிலே வாழ்த்துவார் கண்டனே.
- கலிவிருத்தம்

7- துள்ளுஞ் சிலம்பும் துளிர்வில் வமதும்
கள்ளுள் கலசமாய் கண்டிலார் தம்முள்
புள்ளிக் குள்கோடி புள்ளியென உள்ளானை
உள்ளு ளரணை அறிந்தனார் கண்டேனே.
- கலிவிருத்தம்

8- காணார் படைச்சூழ காரிருள் மேனியரும்
நாணார் துணைச்சூழ நாவலர் பாடிட
ஆணார் திறமமைந்த ஆகிருதி கொண்டிட
கோணா தவரைபுவி கோனவரை கண்டேனே.
- கலிவிருத்தம்

9- மென்மார் முலையன்னை மென்முகத்தே புன்னகையும்
தின்மா ரொன்றிட திகம்பரம் தன்னையும்
என்றன் மனமுறை எம்பிரான் ஈசரை
கன்றது தாயினை கண்டதெனக் கண்டேனே
- கலிவிருத்தம்

10- நன்மையும் தீமையும் நன்னிய நாதனாற்
சென்னி யதனை செறிவுற கண்டிட
நன்னிய மார்க்கம் நமசிவாய என்பதை
இன்னை பகர்ந்தேன் இனியதைநீர் காண்பீரே.
- கலிவிருத்தம்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post