பரணி சிற்றிலக்கிய வகையில் ஒன்று.. வீரத்தின் பொருட்டு பாடப்படுவது... இந்த பரணியின் அமைப்பை கொஞ்சம் பார்க்கலாம்..
பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம் என்பது பழமொழி.. அதன் உண்மை பொருள் .. பரணி இலக்கியத்தில் இடம்பெருமளவு இருந்தால் தரணி எனப்படும் நிலத்தினை ஆளலாம் என்பதே..
பரணி முதலாம் இராசேந்திர சோழனுக்கும் வீர ராசேந்திர சோழனுக்கும் முதன்முதலாக பாடபட்டது இருந்தும் அந்த பாடல்கள் நமக்கு கிடைக்கவில்லை.. பின்னாளில் பரணி சமய தத்துவங்களுக்கும் தெய்வ போர்க்களுக்கும் பாட பட்டது..
ஆயிரம் யானை கொன்ற ஒற்றை வீரனுக்கு பரணி என்கிறது பாட்டியல் .. பின்னாளில் எழுநூறு யானை என்றும் குறிப்புகள் கிடைக்கின்றன..
பரணி பாடும் நியதிகள் சில உண்டு..
1) பாடப்படும் வீரன் எழுநூறு யானை கொன்றிருக்க வேண்டும் அல்லது அத்தகைய பலம் கொண்டிருக்க வேண்டும்..
2) வீரன் உயிரொடு இருத்தல் அவசியம்
3) போரில் வெற்றி கண்டிருக்க வேண்டும்.
4) தோற்ற எதிரி புகழும்படி வெற்றி பெற்றிருக்க வேண்டும்..
பரணி அமைப்பு :
1) கடவுள் வாழ்த்து
2) கடைதிறப்பு - போரில் வென்ற வீரர்கள் நாள்கடந்து திரும்பியதால் பசலை கொண்ட அவரது மனைவிகள் ஊடல் கொண்டு கதவை அடைத்திருப்பர் அக்கதவை திறக்கப் பாடுவது
3) காடு பாடியது - போர்க் கடவுளான காளி உறையும் பாலை நிலத்தை வருணித்து பாடுவது
4) கோயில் பாடியது - காளி உறையும் கோயிலை வருணித்து பாடுவது
5) தேவியை பாடியது - காளியை பாடுவது
6) பேய்களைப் பாடியது - காளினின் சேவரான பேய்களை பாடுவது
7) பேய் முறைப்பாடு - பேய்கள் காளியிடம் போர்கள் வேண்டி யாசிப்பது
8) காளிக்கு கூளி கூறியது - போர் நிகழ்ச்சியை காளிக்கு விவரிப்பது..
9) களம் பாடியது - போர்க்களத்து நிகழ்வுகளை வருணித்து பாடுவது
10) கூழ் அடுதல் - இறந்த வீரர்களின் பிணங்களை கொண்டு பேய்கள் காளிக்கு கூழ் சமைத்து படைப்பது..
இடை இடையே சில உறுப்புகள் சேர்க்கபட்டிருப்பினும் இவை பொதுவாக இருப்பன..
பாவகை எதுவாயினும் ஏற்புடையவையே எனினும் அகவலோசை மற்றும் துள்ளலோசை கொண்ட பாக்கள் அமைவது சிறப்பு..
إرسال تعليق