பேச்சிடையில் பேரிளம்பெண் எம்தமிழன்னை கேட்கிறாள் - பிள்ளாய்
உனக்கேதும் பேராசையுண்டோ ?
ஏனம்மா? எதற்கிக் கேள்வி? - சேயோய்
வள்ளுவனைக் கேட்டேன் பாரதியை கேட்டேன் - யாதுரைத்தாரம்மா
.
தாயிடம் கேட்காமல் இருப்பாரோ? - தீக்கனலோன்.
தம்கவிக்கு சாகாவரங் கேட்டான் - அக்கிழவனோ
வையத்தையே தனக்கு கேட்டான் - நீயும்கேள்.
யான்வேண்டுவது இருக்கட்டும் -- நீதந்தாயோ.?
நான் தாயன்றோ தமிழன்றோ - தந்தேன்.
வையம் கேட்டோனை வையத்திற்கு தந்தேன்
வரங்கேட்டோன் தன்கவியை யானேகாத்தேன். - உனக்கென்
வேண்டும்கேள் மைந்தோய்..
பேராசை எதுவாயினும் - தருவாயோ
பேருடை மொழியே - தந்தேனே
நின்னாசை கடினமோ? - கேள்..
என்னாசை ஒன்றே - தாயே
என்னுயிர் பிரிங்கால் - உலகெல்லாம்
என்னை வெறுப்பினும் - தாயே
நின்சேய் யானெனக் - கனிந்து
எனையும் பழித்தோர் பிறமொழிப் பிள்ளையோர்
பொறாமைகொள்ள நின்மடி சுமந்து
புகழுடை மரணமதை எனக்கீதல் வேண்டினேன்..
மொழிகளையே பெற்ற கர்வத்தோள்- யானுமே
நின்னை பெற்றதோர் பெருங்கர்வமடா - பிள்ளோய்
மரணங்களில் புகழுடையோர் சிலரே - அவற்றுள்
தலையாய புகழ்பெறுவாய் - நின்பிரிவில்
தமிழழுதாள் என்றபுகழுருவாய்.. ஈந்தேன்
யானும் மாந்தர் யாவரும் வெறுத்துனை - ஒதுக்கினும்
அன்னையானுனை காப்பேன் - அதற்காய்
யான்சேர்த்த தர்மமனைத்தும் இழந்தினும் - சிறப்பெனக்
கொள்வேன் கூற்றுவன் வந்தெனைப் - பணிவான்
நினைபெற என்னனுமதி வேண்டுதல் வேண்டும்..
வாழ்வுள்ளவரை நற்றமிழ் நாவுர - துணையிருப்பேன்.
வாய்ப்புகள் யாவும் நானே வழங்குவேன்...
ஈசனே வந்தழிக்க வந்தாலும் எதிர்நின்றுகாப்பேன்
இத்தென் வாக்கு என்றள் என்னன்னை..
Post a Comment