ஆயிரமாம் பேர்கள் உண்டு - அவளுக்கு
ஆயிரம் பேர்கள் கூட உண்டு
ஆசை அவளுக்குத் தீண்டாமை - ஆனால்
அன்பினில் அவள் பேரரசி
அதிகாலை கதிரவன் சோம்பல் முறிக்கும்
அந்தவேளை அவள் பணிக்குசெல்வாள் - பலர்க்கு
அவ்வேளை கனவில் கழிகிறது.
எளிமை அவள் யாதிலும் - எளிமை
இழந்தை பழம் போலினிய - எளிமை
பழம்பெருக்கி பணம்பண்ணும் - பிழைப்பு
பசிக்கு நிறம் சிவப்பு.
தேசத்து கொடியதன் வண்ணம்போல் - பற்பல
நேசத்து மனிதரது எண்ணம் - ஏழைகிழவி தானே
ஏமாற்றிவிடலாம் பாவம்பார்க்கலாம் - சுயமரியாதை
இவர்களின் தந்தைச் சொத்து..
அவமரியாதை அவர்களின் ஆகசிறந்த தானம்.
செந்நிறக் கதிரவன் சேய்மடி சாயும்வரை
அந்நிறக் கரங்கள் தேய்ந்து ஓயும்வரை
நன்நிலக் கொள்கை தான்கொண்ட பேரளிம்பெண்..
தினம்தன் வருமானம் பசிக்கு உபகாரம் - போக
மீதமக் கருணை இல்லத்துக்கு உபயம் - நோகச்
சேர்த்தது ஊரார் கண்ணுக்கு விரயம்
தேய்ந்த கரந்தனில் தேயாத தன்னம்பிக்கை.
ஓய்ந்த வயதிலும் ஓயாத ஓட்டம்
பள்ளிவாசலில் பிள்ளைகூட்டம் மொய்க்கும்
பாட்டி பாட்டி எனச்செல்லம் கொஞ்சும் - அத்தருணமதே
அவள் ஆயுட்கால அறப்பயன் - அத்தருணமதே
அவளுக்கு அத்தனை பேரப்பிள்ளைகள் - அத்தருணத்திலா
அவள் பரமனை சேரவேண்டும்? - அத்தருணத்திலா
அவள் சாலையில் வீழவேண்டும்..
நெஞ்சம் பதறிட பிள்ளைகளுக்கு வயதில்லை
கொஞ்சம் துடித்திட உறவினத் துணையில்லை
தஞ்சம் என்றிடம் சேர்ந்தவர் எவருமில்லை..
சாலைகள் ரோஜாவனங்கள் தான் - சிலநேரம்
சாலைகள் தண்டகவனம் தான் - பாவங்கள்
அதற்கில்லை பார்ப்பதும் இல்லை
இறந்தவள் யாரோ என்றது சமூகம்
வாங்கித்தின்ற வாய்க்கு எப்படி வந்ததோ - வார்த்தை
ஏங்கிச்செத்த கிழவிக்கு புண்ணியம் உதவலையே...
காத்திருந்து பார்த்தேன் கருணை இல்லத்து - கடவுளை
சேர்த்தனைத்து சென்றார் தம்மன்னை இவளென்று - தானம்
செய்திடல் நன்று இறைவன் சொன்னானின்று.
..
Post a Comment