சிவகவசம்

 

காப்பு:

நினைப்போர்க்கு நல்வினைசேர் நன்மைசேர் நெஞ்சில்

பனைப்போல பக்திசெய் பண்பும்தான் மேவ

மனையோடு வெற்றியும்சேர் மனதிலுறை எங்கள்

வினையன் சிவன் தனை. 


இருளில் இடர்தீர இதய பலங்கூட

இறைவபதம் நெஞ்சே நினை..


நூல்.. 


எண்ணிய தெல்லாம் எனக்குடன் நிகழ

நுண்ணிய மதியை நிதமருள் வாயே

துண்ணிய பொருளில் துண்ணியன் உன்னை

எண்ணிய நொடியில் எனதிடர் ஓட

விண்ணவர் தேவர் வினைகொடு கோளர்

வண்ணமும் கூட வகையருள் வாறே. 1


கண்ணினை கொடுத்த கண்ணப்பர் தனக்கே

விண்ணினை கொடுத்த விடையேறு கோவே

வந்தனை செய்ய வந்தவர் தம்மின்

வல்வினை தீர்க்க வந்திடு வாயே. 2


ஈருடை தலையை ஈசனும் காக்க

சீருடை நெற்றி சிவபுரன் காக்க

பார்க்கின்ற கண்ணை பரமனே காக்க

மூக்கெனும் நாசி மூத்தவன் காக்க3


பேசிடும் வாயை பேரிறை காக்க

நேசிக்கும் கழுத்தை நீலனே காக்க

பூசுடை தோளை புனிதனே காக்க

மாசிலர் மார்பை மறையவன் காக்க..4


உண்டவர் வயிற்றை உமையவன் காக்க

மண்டலர் இடையை மலரவன் காக்க

எண்ணிலா குறியை ஏகனே காக்க

திண்ணிய தொடைகள் தூயவன் காக்க


முழங்கால் முழுதும் முதுவிலன் காக்க

வழங்கிடும் பாதம் வையவன் காக்க

அடங்கா துடிப்பை அருணையன் காக்க

மடங்கா மனதை மதுரையன் காக்க. 6


இடங்கலை தன்னை இறைவரும் காக்க

பிங்கலை தன்னை பெருந்துணைக் காக்க

சுழுமுனை அதனை சுந்தரர் காக்க

எழுவினை எல்லாம் எளியவர் காக்க.  7


அடியவர் அழகை அரணவர் காக்க

பொடியுடை மேனி பொருளொடு காக்க

முடிவது எல்லாம் முடிந்திடக் காக்க

விடிவது தன்னில் விளங்கிடக் காக்க. 8









Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post