கனா - short story

 

ஆல்பர்ட் சுந்தர் விங்க்ஸ் - ன் தலைமை அலுவலகம். நான் சுந்தர் , என் ஆருயிர் நண்பன் ஆல்பர்ட் உடன் சேர்ந்து துவங்கிய ஒரு சிறு வியாபாரம் 5 வருடங்களில் மாநில அளவில் பெரிதாக வளர்ந்து நிற்கிறது. முழுதும் 2 டயர் ஏசியால் குளிர்விக்கப் பட்ட அறையில் நானும் ஆல்பர்ட்டும் உட்கார்ந்திருந்தோம். 


மேனேஜர் பொறுப்பில் இருக்கும் சாந்தினி வந்து கையெழுத்து வாங்கிப் போனாள். நாங்கள் சகஜமாக பேசிக்கொண்டிருந்தோம்.. அவ்வப்போது தோன்றும் நகைச்சுவையும் துள்ளல்களும் ஒருவாறு காலம்போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம்.. 


16 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் நாங்கள் 15 வது மாடியில். நாங்களிருந்தோம் கையெழுத்துடன் கீழே போன சாந்தினி திரும்பி வர சொல்லி லேண்ட்லைனில் அழைத்தான் ஆல்பர்ட்.. 


டால்ஸ்விங்க்ஸ் எக்ஸ்போர்ட் கம்பனியின் ஆர்டர்களும் போக்குவரவுகளையும் எடுத்து வந்திருந்தாள்..  மதியநேரம் என்பதால் சற்று கதைபேசினோம். பேச்சில் பேச்சில் சில தொடர்களை சில வரிகளை மட்டும் இல்லை இல்லை. வரிகள் அசைவுகள் நடப்புகள் சூழல்கள் என எல்லாம் எங்கோ எங்கோ இல்லை இல்லை எல்லாம் இங்கே இதே இடத்தில் இதற்கு முன்பே நடந்தது போல இருந்தது..  இந்த குழப்பத்தை என்னவென்று யூகிக்க எடுத்த காலத்தில் இருவரும் பேச்சை நிறுத்தி என்னை நோக்கினர். 


நிமிடங்கள் கடந்திருக்கலாம் ஆல்பர்ட் தான் என்னை உலுக்கினான்..  பலகாலம் அலமந்து (கோமா) இருந்து சுயநினைவுக்கு வந்தது போல் இருந்தது.. ஆனால் அந்த நிமிடங்கள் அவர்கள் என்னை வெறித்தபடி கடந்த அதே நிமிடங்கள் . நானா கடந்தது பல நாட்கள் மாதங்கள் வருடங்கள்.  என்னவென்று விவரிக்கவே பல நாட்கள் ஆகும் நிகழ்வுகளை நிமிடங்களில் கடந்து வந்திருந்தேன்.. 


உலுக்கிய ஆல்பர்ட் என்னை நிதானமாய்  அமர்த்தி தண்ணீர் தந்து கேட்டான் என்னாச்சு? சுந்தர் .. 


என்னாச்சு சுந்தர்? .  மற்றொரு என்னாச்சு சுந்தர்?  ஏற்கனவே கேட்டவை.. அடுத்த கேள்வியும் ஏற்கனவே கேட்டவை. ஆனால் நடந்த நிகழ்வுகளா? நடக்கும் நிகழ்வுகளா? கனவா? நினைவா? நனவா? . நோயா? வரமா? சாபமா?. 


ஹே சுந்தர் என்னாச்சு? என்றவள் சாந்தினி. 


மீண்டும் தண்ணீர் குடித்து. ஒன்னுமில்ல சாந்தினி நீ கீழபோய் இருக்கும் வேலைகளை பாரு .. அவள் சென்ற பின்பு. ஆல்பர்ட்டை ஆழமாய் நோக்கினேன் அந்த கண்களில் ஒரு நிலையின்மை , பயம் , சலனம் தெரிந்தது.. 


என்னாச்சு சுந்தர்?.  


ஒன்னுமில்லடா திடீர்னு கொஞ்சம் ப்ளாங்க் ஆகிட்டேன்.. 


நார்மலா தான பீல் பன்ற. இல்ல டாக்டர்ட்ட போகலாமா?. 


இல்ல இல்ல ஆல்பர்ட் நான் ஆல்ரைட். 


சில நிமிட அமைதி நிலவிய அறையில். 


ஆல்பர்ட் . எனக்கு சின்ன சந்தேகம் . 


சொல்லு சுந்தர்.  ஐ சால்வ் இன் மை லெவல். 


இல்ல கொஞ்ச நாளா நான் ஏதோ டிஸ்டர்ப்ட் ஆ இருக்கேன்னு நினைக்குறேன். என்ன நடக்குதுனு புரியவே மாட்டேங்குது.. நான் உன்கிட்ட நார்மலா தான இருக்கேன்? .. 


ஹே கொஞ்சம் முன்னாடி கூட என்கிட்ட ஜாலியா கேஷுவலா தான இருந்த ஏன் என்னாச்சு எதாவது பிரச்சனையா சுந்தர்?. 


ஆமாம் ஆல்பர்ட் கொஞ்ச நாளா என்ன சுத்தி நடக்குறது எல்லாம் கனவா நிஜமாங்கிற குழப்பமாவே இருக்கு.. ஆமாம் எனக்கு கனவுக்கும் நிஜத்துக்கும் வித்யாசம் தெரிய மாட்டங்குது.. என்னால எதையும் தெளிவா புரிஞ்சிக்க முடியல.. 


ஹே என்ன சொல்ற சுந்தர் . ஏன் இத என்கிட்ட சொல்லல . வா நாம நல்ல டாக்டரா பாக்கலாம் சரியா தூங்கிருக்க மாட்ட அதனால எதாவது ஹார்மோன் கன்ஜெக்ஷனா இருக்கலாம். எனக்கு தெரிஞ்சு ஒரு டாக்டர் இருக்காரு விஸ்வநாதன்னு பேரு அவர கன்சல்ட் பண்ணலாம் ஒரளவு க்ளியரா விசயத்த சொல்லிடுவாரு.  


அதெல்லாம் இருக்கட்டும் ஆல்பர்ட் எனக்கு கொஞ்சம் கேள்வி இருக்கு அதுக்கு பதில் சொல்லு.


கேளு சுந்தர். 


நான் நேர்மையா உழைச்சு தான இந்த இடத்துக்கு வந்துருக்கேன் . ஏன் கேக்குறேன்னா இத உன்னவிட சரியா யாரும் சொல்லமுடியாது.. 


நிச்சயமா சுந்தர் நான் இத்தன வருசமா உன்னோட இருக்கேன் நீ நேர்மையானவன் தான் நல்ல உழைப்பாளி தான்.  ஏன்?. 


நான் உன்ன ஒரு நல்ல நண்பனா தான நடத்துனேன்?.


ஹே என்ன கேள்வியிது சுந்தர் நாம எவ்வளவு நல்ல பிரண்ட்ஸ்னு நம்ம ஊருக்கே தெரியுமில்ல..  


ஆனா அப்படி பட்ட நண்பன் என்ன கொல்லப் பாப்பானா?. 


டேய் நான் உன்ன கொல்றதா? என்ன பைத்தியக்காரத்தனம்டா இது . நீ கண்டதயும் போட்டு குழப்பிக்காத வா நாம டாக்டர்கிட்ட போய் பாக்கலாம்..


இல்ல ஆல்பர்ட் என் கனவுல வந்தத வெச்சி தான் கேக்குறேன் என்ன கொல்லப் பாப்பியா? . 


இப்படியே  பேசிட்டு இருந்தா உன்ன நிஜமாவே கொன்னுடுவேன் ராஸ்கல்..


இல்ல ஆல்பர்ட் நீ சாந்தினிய காதலிக்கிறியா? ஒரு வாரத்துல ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணப்போறியா? 


ஆமா அதிலென்ன? 


இல்ல ஆல்பர்ட் நீயும் சாந்தினியும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணப்போற வழியில ரெண்டு பேரும் என்கார்ல அடிபட்டு இறந்துடுவீங்க. 


எப்படிடா சொல்ற? ஏன் உனக்கு நான் சாந்தினிய கல்யாணம் பண்றது புடிக்கலயா?  


இல்லடா நீங்க கல்யாணம் செஞ்சிகிட்டா எனக்கு ரொம்ப சந்தோசம்டா . ஆனா அது கனவா நிஜமானு தெரியலடா.. 


அது கனவாவும் வேண்டாம் நிஜமாவும் வேண்டாம் விட்டுதள்ளு.. 


இல்லடா அன்னிக்கி உங்க பாடியஎன் கையால தொட்டேன் இன்னும் அந்த உணர்ச்சி என் கைக்கு தெரியுது.. 


கோவபட்ட ஆல்பர்ட் டேபிளில் இருந்த பேப்பர் வெய்ட்டை எடுத்து வீசினான் ஆனால் பேப்பர் வெய்ட் டேபிளில் தான் இருந்தது சந்தேகித்து பயந்த நான் கையில் கிடைத்த பொருளை எடுத்து வீச அது அவனை கடந்து விழுந்தது . அவனும் எதையோ என்மேல் வீசினான் எனக்குள் அது புகுந்து போய் விழுந்தது .. 


குழப்பங்கள் மேலோங்க வேகமாய் நகர்ந்து கண்ணாடித்திரையில் நின்று பார்த்தபோது கீழே சாலை வாகனங்களால் நிரம்பியிருந்தது . எதையோ நினைத்தவன் கண்ணாடியை உடைத்து கொண்டு விழ ஆல்பர்ட் சுந்தர் சுந்தர் என்று கத்திட சில நிமிட ஆனந்தம் விழும் நொடி நெருங்கியது விழுந்தும் விட்டேன் துளி ரத்தமில்லை வழியில்லை.. நிமிர்ந்து பார்த்தால் அலுவலக வாசல் எங்கும் கூட்டம் . நடுவில் எனக்கும் ஆல்பர்ட்டுக்கும் சாந்தினிக்கும் கண்ணீர் அஞ்சலி படம்..



கனா



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post