பற்று - short story

 

நெல்லிஸ் காபி பார். நகரின் முக்கிய பிரபலமான காபி பார்லர்களில் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கும் ஒரு உயர்ரக காபிக்கடை.. 


கடையின் சிறப்பம்சமே 34 வகை காபி தயாரித்து தருவது ஒரு ஏசி பார்லரில் சிலர் அவ்வபோது அமர்ந்து பருக . குடும்பத்தோடு வந்து அருந்த தகுந்த இடம் என்பதே.. 


முரளி கடையின் பல வருட சர்வர் தற்காலிக மேனேஜர்.. பத்து வயதில் முதன்முதலில் வேலைக்கு வந்தபோது ஒரு நாளைக்கு 20 ரூபாயாக இருந்தது தற்போது  அறநூத்தி சொச்சமாய் வருகிறது அதுபோக தினம் யாராவது தந்து போன டிப்ஸ் என்று தினமும் ஓடிக்கொண்டிருந்தது.. 


கல்லூரிக் காதலர்கள் சிறுசிறு கூட்டங்களாக வந்து கடையே கலைகட்டும். இரண்டு வாரத்துக்கு முன் ஒரு காதலனொடு வந்த பெண் அடுத்த வாரங்களில் வேறொரு காதலனோடு வரும் வர்த்தக காதல்கள் பலவற்றை பார்த்துசலித்து விட்டாலும். அவன் மனம் ஒரு பெண்ணை அள்ளி அள்ளி காதலிக்க ஆசைபட்டிருந்தது.. அப்படி ஒருபெண்ணை இவனும் தேடிக்கொண்டு தான் இருக்கிறான்.. 


அமர்ந்துள்ள பலருள் தன்னவளை  தனக்கானவளை தேடித்தேடி தேய்ந்து தான் போனான்.. அவனை பொருத்த மட்டில் அப்படி ஒரு பெண் கிடைத்தால் சாகும் நொடிவரை பேரானந்தம் மட்டுமே என்றிருந்தான். அதன் தீவிரமே பல பல நாளாய் அந்த கனவுக்கன்னியையே தேடுகிற தெம்பையும் நம்பிக்கையும் தருகிறது.. 


கொஞ்ச நாளா இந்த தீவிரத்துக்குள்ள ஒருத்தர் குச்சிவெச்சி குடையறாப்ல பன்றாப்டி. .. வெறும் ஜோடிகளை மட்டுமே வாடிக்கையாளராக பார்த்து பழகியவனுக்கு அந்த தனிமனிதன் உறுத்தலாய் தான் இருந்தார்..


பத்து பதினைந்து நாளாய் அவர் தனியாகவே வருவதும் போதும் அவனுக்குள் ஏதோ உறுத்தலை தர. அதாவது அவர் வருகையோ தனிமையோ அவனை ஒன்றும் செய்யவில்லை ஆனால் அந்த ஆனந்தம் அவனை ஆழ்மனதில் ஏங்க வைத்ததது. நாளடைவில் அவன் அவரை தன் தலைவனாகவே ஏற்றுக்கொண்டே விட்டான் . 


நெஞ்சக்குழியில் அரித்துக்கொண்டிருந்த அந்த கேள்வியை முழுங்கமுடியாமல் கக்கியே விட்டான்..  ஏன் சார் நானும் தெனமம் பாக்குறேன் தனியாவே வரீங்க தனியாவே போரீங்க ஏன் உங்களுக்கு யாரும் காதலியில்லையா?  என்று கேட்டே விட்டான் அந்த நபரோ ஒன்றுமே சொல்லாமல் புன்னகைத்துவிட்டு கடந்துவிட்டார்.. 


இதை சற்றும் எதிர்பாராத முரளியோ உறைந்தே போனான். சரி இன்று வரட்டும் விடுறதா இல்ல.. என்று கங்கனமாய் காத்திருந்தான்.  அவனது காவிய புருசன் வந்திருந்தார். ஏன் சார் இது உங்களுக்கே நல்லாயிருக்கா நேத்து நான் கேட்டா சும்மா சிரிச்சிட்டு போரீங்க.. ?. என்று அப்பளமாய் பொரிந்துதள்ள.. 


சரிப்பா என்ன கேட்கனும் கேளு. . என்றார் அவர்.


உங்களுக்கு யாரும் காதலி இல்லயா? 


இத்தனை நாளா பாத்துமா உனக்கு தெரியல எனக்கு காதலியெல்லாம் இல்ல.. 


ஏன் பாக்க நல்லா அழகா தான இருக்கீங்க? 


அதனால என்னப்பா காதலியெல்லாம் இல்ல.. 


ஏன் சார் காதலியே இல்ல? உங்களுக்கு யாரும் பரபோஸே பண்ணலயா.?. 


இல்லப்பா .. 


சரி நீங்க யாருக்கும் காதல சொல்லவே இல்லயா? . 


நான் யாரயுமே காதலிக்கலயே.. 


என்ன சார் அட்லீஸ்ட் உங்களுக்கு யார்மேலயும் காதலிக்க ஆசை கூடவா வரல?. 


இல்லப்பா . அது இருக்கட்டும் நீ ஏன் காதலபத்தியே கேக்குறப்பா?. 


இல்ல சார் எனக்கு ஒரு பொண்ண உருகி உருகி காதலிக்கனும் ஆசை. அப்படி ஒரு பொண்ணத்தான் தேடிட்டு இருக்கேன்   அந்த பொண்ணு மட்டும் கிடைச்சா அதுக்கப்புறம் வாழ்க்கையே சந்தோசமா  இருக்கும். ஆனா அந்த சந்தோசத்த உங்ககிட்ட பாத்தேன். நானும் சிலநாளா கவனிச்சுட்டு தான் இருந்தேன் நீங்க தனியா தான் வரீங்க ஆனா உங்ககிட்ட அந்த சந்தோசம் இருக்கு.. அதனால தான் கேட்டேன்.. 


இதுதான் விசயமாப்பா. வெளிப்படையா சொல்லனும்னா காதல்ங்கிறது ஒரு உணர்வு தான் பா . அது நம்ம உடம்புல சில ஹார்மோன்கள சுரக்க வைக்கும் அந்த ஹார்மோன் சுரக்கும் போது ஒரு போதை மாதிரி இருக்கும் அப்ப நம்ம மனசு அந்த போதைக்கு அடிமையாகிட்டும்.. 


அப்ப உங்களுக்கு அந்த ஹார்மோன் சுரக்கலன்னு சொல்றீங்களா?. 


இல்லப்பா நீ எப்படி ஒரு பொண்ண தேடி அந்த பொண்ணு கிடைச்சாதான்னு இருக்கியோ . அது போல எனக்கு எந்த பொண்ணு மேலயும் அந்த உணர்வு வரல.. 


அப்புறம் எப்படி இவ்வளவு சந்தோசம்.. 


அந்த உணர்வு ஒரு காபிலயே எனக்கு கிடைக்குதே.. அந்த ஹார்மோன் சுரக்க ஒரு தூண்டுதல் வேணும் அந்த தூண்டுதல் தரப்போற பொண்ண நீ தேடுற . நான் அந்த தூண்டுதல ஒரு காபிலயே எடுத்துக்குறேன்.. என்று சொல்லிப் போனவர் தான். முரளிக்கான வாழ்க்கையை திருப்பிவிட்டவர்.. 





பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

(அதிகாரம்:துறவு குறள் எண்:350


பொழிப்பு (மு வரதராசன்): பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும்; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.




மணக்குடவர் உரை: பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக.

பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.


பரிமேலழகர் உரை: பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க, அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தான் செய்க, விடாது வந்த பற்று விடுதற்கு.

(கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் பற்றற்றான் என்றார். பற்று அற்றான் பற்று என்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் பற்று என்றது, பற்றப்படுவதனை. அதன்கண் உபாயம் என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.)


குன்றக்குடி அடிகளார் உரை: யாதொரு பற்றுமில்லாத இறைவனைப் பற்றுக. பற்றுக்களை விடுதலுக்கு உதவியாக இறைவனைப் பற்றுக. இறைவனைப் பற்றுதல், பற்றறுத்தலுக்காகவே யாதல் வேண்டும். பிறவற்றை யாசித்துப் பெறுதலுக்காக இருத்தல் கூடாது என்பது கருத்து.


%%%%%%%%%%%%%%%%%%%%%%


என் உரை.. 


பற்றில்லாதவன் அந்த பற்றை அறுப்பதற்கான மாற்றுப் பற்றினை கொண்டிருப்பான் அப்பற்றினை நாம் பற்று விடுவதற்கு பயன்படுத்தலாம்.. 





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post