உருவாறாய் உருவானான்

உருவாறாய் உருவானான் உருவொன்றாய் உருமாறி
 கருவின்றி கருவாகி கருவார்க்கு கருவாகி 
கருத்தாகி கருத்துள்ளே குருத்தாகி திருத்தமாய்
 வருத்தாத விருப்பாகி விரும்புவார் விருப்பமே.. 1

 அருவத்தில் அருவாகி அருளவே உருவாகி 
மருந்தாகி விருந்தாகி மருதத்தில் முருகாகி 
வருவார்க்கு அருளாகி வருவாழ்வாய் வருவானே
 தருமங்கள் தருவானே திருமகள் மருமகனே…2 

 சருகாகி உருகிடும்முன் சிருங்காரம் உருவாக்கி 
எருவாகி இருமையும் அருமைசெய் இருதாளை
 மருவிலா மருந்தாக முருகாக உருவேற்ற
 அரும்பிணி வரும்வினை இரும்யினி கரும்பெனவே.. 3 

 குருவாகி குருமார்க்கு குருவான குருவாகி
 குருந்தை குருக்கும் குருவாகி குருவான 
குருவே குருவே கருத்தின் கருவே கருமலை கரும்பை கருதவே குருவே.. 4

 மருவிலா மருதனே முருகனே மருந்தாக வருவோனே முருகாய் வருவாயே அருள்வாயே 
அருகின் அரும்பே அருந்தேனே அருமருந்தே
 தருவாய் தருமத் திருவே தருவேளே.. 5

 திருவில் திருவாய் தருவாய் திருவே திருவின் திருவின் திருவாம் திருவே திருவார் திருவே திருத்தும் திருவே திரும்பா திருக்கும் திருப்பம் தருவாயே.. 6 

 முருகும் முருகே முருகின் முருகே அருகும் அருகர்க்கு அருள்வாய் முருகே பருகும் முருகில் பெருகும் முருகே மருகும் மருளை மருக்கும் முருகே.. 7

 வருகும் விருப்பம் வருக வருக பெருகும் பெருக்கம் பெருக பெருக உருகும் உருக்கம் உருக உருக 
முருகும் முருகன் முருக முருகவே.. 8

 இருக்கும் இருப்பை இருக்கும் இருளை உருக்கும் உருவாய் உருக்கும் உருவே எருக்கும் அருகும் எருப்பும் நெருப்பின் நெருப்பே செருக்கை இருக்கும் நெருப்பே.. 9

 சுருக்கில் சுருளும் சுருக்கன் சுருட்டும் வருத்தம் வருத்தம் விருத்தம் விருத்தம் இருட்டும் திருட்டும் இருக்கா திருக்கும் முருகாய் பெருகும் நெருப்பாம் முருகே.. 10

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post