நிரல் நிழல்...

என்ன மனோ எதாவது பேயிங் இருக்கா?..

இத எதுக்கு எங்கிட்ட குடுத்த?. மொத்தமும் டீகாபி கணக்கு கரண்ட் பில் கணக்குதான் இருக்கு. ஏன் இப்போ டிடெக்டீவ் பொழப்பும் போச்சா.. ?

என்ன பண்றது மனோ. இந்த ஜிபிஎஸ் .வந்ததுல இருந்து பாலோயிங் கேஸ் இல்லாம போச்சு அதுமில்லாம ஆதார்கார்டு வந்ததுக்குபின்ன ஆபீஸே காத்தாடுது.. ஏதோ அப்பா கடையவச்சி பொழச்சிக்க வேண்டியது தான்.. வேற ஏதாவது வேலை கிடைச்சா பரவாயில்ல தான்...

அதான் கதை எழுதுனீயே அந்த புக்கெல்லாம் வித்தாலாவது..?

இல்லமனோ ப்ரீயா படிக்கவே ஆளில்ல காசுக்குடுத்து யாரு படிப்பா..?.. அதுமில்லாம நான் விக்கிற எண்ணத்துலயும் இல்ல..

எப்படியோ இந்த டெர்ம் உனக்கு ஜீரோ டேக்ஸ் .. 

சரி மனோ நான் கிளம்புறேன் அப்பாட்ட ஒரு வேலை இருக்கு..


மாடியிலிருந்த அலுவகத்தின் வெளியே வந்தேன் ஆறடுக்கில் மனோ இரண்டாம் தளம் சற்று விசாலமான அறை முன் பக்க பார்டிக் அடுத்த அறையின் தொடர்பு பாலம். பால்ஸ் சீலிங் . மீடியம் சென்டரலைஸ்டு ஏசி என ஒரு நவீன அறைக்கான தோற்றம். மனோ குடுத்து வைத்தவன் எப்படியோ ஆடிட்டர் ஆகி சில பிரதான பிரபலங்களை க்ளையிண்டாக கொண்டவன்.. அவற்றுள் நான் தான் சில்லறை வர்த்தகம் ஏதோ சொந்தகாரனா போய்ட்டானேனு ஸ்டில் ஹி டூயிங் திஸ் பார் மீ..

மனோ பைக் இருக்கா? இருக்கே ஏன்டா? ..நீ பிஸியா? இல்லையே 6:30க்கு க்ளைண்ட் மீடிங் அதுவரைக்கும்  ப்ரீதான்.. அப்போது தான் மணி பார்க்கிறேன் கடந்த சில வாரங்களாக மணிப்பார்க்கும் பழக்கமேயில்லாது போனது . 5:30 தான வா ஒரு காபி சாப்பிடலாம்.. போலாமே.. மையிலாப்பூரின் பிரதான வீதிகளில் ஒன்று அது. இத்தனைக்கும் குளத்தருகில் செல்லும் சாலை என்றாலும் இன்று வாகன நெரிசலில்லை. அய்யரே ரெண்டு காபி. சரி மனோ செட்டில் ஆகிட்ட எப்ப கல்யாணம்?..

பாக்கலாம்டா. முதல்ல காபி . ஆறு நிமிட தயாரிப்பில் உருவான காபியது. விலைவாசியின் காலத்தில் இன்றும் பாரம்பரியம் மாறாது பித்தளை டபரா செட் தான்.. கடை தான் பெரிசானதே தவிர பாரம்பரியம் மாறவில்லை நன்று..

பேச்சிடையில் குறுக்கே வந்த வயதுமிகுந்த வாலிபர் என்னை விசாரித்துபின் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.. 

வணக்கம் சொல்லுங்க என்ன விசயம்?.அதாவது நான் உங்க பேன் இப்போ ரீசென்டா ஸ்டார் சேனல்ல ஒரு சீரியல் ப்ரொடியூஸ்  பன்றேன் . நியாயபடி அது உங்களுக்கு சேர வேண்டிய க்ரெடிட் தான் .. உங்களோட நாவல் ஒன்ன தான் அந்த சீரியலா எடுக்குறோம் அதுபத்தி உங்ககிட்ட சொல்லிடனும்னு ரொம்ப நாளா தேடினோம் கிடைக்கல இன்னிக்கி அமைஞ்சிருக்கு... 

ஓ அதான் விசயமா அதுகென்ன எடுத்துக்கோங்க... ஒன்னும் பிரச்சனையில்ல நான் கேஸ் எல்லாம் போடமாட்டேன்.

 அதுமட்டுமில்ல சார் நாங்க இன்னொரு சீரியல் தயாரிக்க சொல்லி சேனல்ல ஒரு ஆபர் வந்துருக்கு. அதுக்கு நீங்க எதாவது.? 

எதாவது தைரியமா கேளுங்க இதுல என்ன இருக்கு? அதுல கொஞ்சம் ப்ரஷா இருக்கனும்னு சேனல் ரெக்குவஸ்ட் அதனால நீங்க புதுசா ஒரு கதை எழுதி அத நீங்களே டைரக்ட் பண்ணணும்னு கேக்கலாம்னு தான் வந்தேன்..

சார் எனக்கு இதெல்லாம் தெரியாது . அதுமில்லாம என் லைன் வேற. 

புரியுது சார் பட் ட்ரை பண்ணுங்க எங்க டெக் டீம் சப்போர்ட் பண்ணுவாங்க. நல்லா யோசிச்சு பொறுமையா சொல்லுங்க.. இது என் கார்ட் முடிவு பண்ணிட்டு கால் பண்ணுங்க நான் வரேன்..

மனோ டைம்ஆச்சு வா போலாம்... சொன்ன மாதிரி ட்ரை பண்ணுடா ..மீடியா சான்ஸ் கிடைக்கிறது கஷ்டம்டா தானா வருதே ஏன் வேணாங்குற ?. 

பாக்கலாம் மனோ அதுக்கு முதல்ல ஒரு கதை வேணுமே. லெட்ஸ் ஸீ..


மனோவை விட்டுவிட்டு நான் எனது சொந்த ஊருக்கே வந்துவிட்டேன்.. வக்கீல் சார்.உன்கிட்ட கொஞ்சம் பேசனுமே.. சொல்லுடா என்ன விசயம் இல்ல நேர்ல பேசிக்கலாம் பஸ்டாண்ட் வா. அங்கதான்டா இருக்கேன். சரி இரு மதிகோண்பாளயம் - பஸ்ல வந்துட்டு இருக்கேன்...

ஸ்கார்பியோ நகர்ந்து கொண்டிருக்கையில் கேட்டான்... சொல்லுங்க ஆபிசர் என்ன விசயம். இல்ல சென்னை போனேன் அங்க அண்ணா மனோஜ்  பாத்து பேசிட்டு இருந்தேன்.அப்ப ஒருத்தன் என்ன சீரியல் டைரக்ட் பண்ண சொன்னார்.. இப்ப இருக்குற சூழ்நிலையில செய்லாம் நினைக்கிறேன் கொஞ்சம் வருமானமாவது இருக்கும்...

செய்டா தப்பில்ல ஒரு புது அனுபவம் தான . ஏற்கனவே. ரெண்டு மூணு சார்ட் பிலிம்ல உன் கதைய எடுத்துருக்காங்க. எனக்கு இது சரியா இருக்கும்னு தோணுது.

ஆமாடா எனக்கும் அப்படிதான் படுது. அவன் கூட என் நாவலதான் சீரியல் எடுக்குறதா சொன்னான்.

அப்படியா அப்ப கேஸ் போட்டு ராயல்டி வாங்கிறலாம் வா..

வேணாம்டா அவனுக்கே எனக்கு ஒரு க்ரெடிட் குடுக்கனும் தோணிருக்கு அதனாலதான் இத குடுக்க முயற்சி பண்றான்.. லெட்ஸ் ஸீ...

 ஹலோ . மிஸ்டர் சிவராம்?. நான் பவித்ரன் . நீங்க கார்ட் குடுத்தீங்களே! 

ஆமாம் சா் எங்க மீட் பண்ணலாம் நான் எங்க வரட்டும்.

பட் நான் தருமபுரியில இருக்கேன் . நான் டைரக்ட்டுக்கு ரெடினு சொல்ல தான் இந்தபோன்கால் அண்ட் கதை இன்னும் தயாராகல..

இருக்கட்டும் சர் டேக் யுவர் ஓன் டைம்.வேணும்னா எங்க டெக் டீம் அங்க அனுப்புறேன் டிஸ்கஸ் பண்ணி கதை ரெடி பண்ணுங்களேன்..

சொன்னபடி டெக் டீம் வந்து தங்கிட்டாங்க எல்லாம் சிவராம் செலவுதான். இப்ப டிஸ்கஷன் தொடங்க..

      *******************************

வந்தா போக வேண்டியது தானே ... என்றவள் வலியுறுத்தி சொல்கிறாள்.. சந்திரனி பேருக்கு ஏற்றவள்.. ஔியுடை முகம்.. பிறையுடைஅகம்.. கறை மட்டும் தானில்லை...  என்னை தான் சொல்கிறாள்.. அப்படி வந்தது என்ன?

என்ன நீ அவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட .. போறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?.. என்றேன்.. வராம இருக்கவன் எத்தனை பேரு தெரியுமா?..என்றாள்.. நீ தான் டாக்டராச்சே எத்தனை சொல்லு? என்ற என் வாய்தனில் விரல் பதித்து உஷ்ஷ் என்றபடி... நான் சொல்றேன்ல போ.. என்றாள்..

நீயும் வாயேன் ? என்றேன்.. டேய் இது உன் தேவை நீதான் போகனும்.. அதுமில்லாம எனக்கு பர்மிஷன் இல்ல.. உனக்கு வந்துருக்கு போயேன்.. என்றாள்.  அப்படி என்ன தான் வந்தது?..

அட அதெல்லாமா சொல்லுவாங்க..?.. ஸ்பெயின்ல வேலைக்கு அப்பாயிண்ட்மண்ட் வந்துருக்கு..  போகலாமா வேணாமானு தான் கேட்டுட்டு இருக்கேன்..

சரி அத குடேன் நான் வேற கிளம்புறேனே... எத? ... அட ஒத்த முத்தத்துக்கே ஒரு சைன்ய போரே நடத்தனும் போலயே...  டேய் ஹரிஷ் அங்க போனதும் என்ன மறந்துற மாட்டியே..

எத மறந்தாலும் உன்னையும் மாம்ஸயும் மறக்கமாட்டேன்.. என்றவுடன் இச்சிய முத்தம் எத்தனை கலோரி என்று தெரியுமா?..

வெளியே வரும் ஹரிஷை மீண்டும் உள்ளே அழைத்து சென்று பேசுகிறேன்.. பேசி போராடி அவனது தயக்கத்தை உடைத்தும்.

நல்ல கதைதான் மாம்ஸ் நல்ல நடிகர்கள பயன்படுத்தலாம்ல... 

இல்லடா நடிகர்கள்னா கதை தள்ளி போகும் புதுமுகங்கள்  கதையோட கதாபாத்திரமா சிங்க் ஆகும்டா.. இப்ப வில்லா படத்த விஜய் நடிச்சிருந்தா நல்லாருக்காது.. அதேபோல இந்த கதையும் சயின்ஸ்பிக்ஷன் தான...

சந்திரனி சார்ட்டா நிலா.. நிலா நீ என்ன சொல்ற? ஹரிஷ்  எதையோ சொல்லாதே என்று செய்கை செய்வதை பார்க்காமலில்லை.. என்னடா ஸ்பெயின் அப்பாயிண்மெண்ட் வந்துருச்சா? எப்படி மாம்ஸ்? ரெண்டு மூஞ்சி பாத்த மூஞ்சி தானா முகத்த பாத்தே சொல்லிட மாட்டேன்..  சரி கேம்ஸ் அப்பார்ட் நீ ஸ்பெயின் போடா. நான் வேற யாராவது பாத்துக்குறேன்.. 

இல்ல.மாம்ஸ் நான்  போகலை. இங்க எதும் வேலையில்லைனு தான் போக முடிவு பண்ணேன். உன்னயும் சந்திரனியயும விட்டு போக மனசில்ல... அதான் இப்ப டிவில வேலை கிடைச்சிருச்சே .. என்று அப்பாயிண்மண்ட்டை கிழித்து போட்டான்.. 

சரி ஹீரோயின் தான் அடுத்து தேடனும். என்றேன்.. ஏன் என் ஹீரோயினுக்கு என்ன கொற.. 

டேய் நிலாக்கு ஏன்டா சீரியல் எல்லாம் அவதான் டாக்டராச்சே..  

ஆமா பேஸண்ட் க்யூ குறையாம நிக்கிது பாரு. அதுமில்லாம சீரியல்லயாவது ரெண்டு மூணு ரொமான்ஸ் இருக்குமில்ல.. 

டேய் எழுதுறது நானு .. 

சுத்தம் போ. நீயே சாமியாராச்சே.. 

இந்த சாமியாராலதான் இன்னிக்கி உன் ஸ்பெயின் வேல போச்சு.. இந்த சாமியார் குடுத்தது தான இந்த நிலா..

*******************************************

சாமி சார் நீங்க தான் இத பண்ணனும்.. என் கணக்குபடி இது உங்களுக்கு தான் பொருந்தும்.. சார் ப்ளிஸ் நான் ஹரிஸ சம்மதிக்க வைக்கவே ரொம்ப கஷ்டபட்டேன்.. ரதி நீயும் பண்ணு எனக்கு இது ரொம்ப முக்கியமான வாய்ப்பு இப்போதைக்கு நான் நம்பகூடிய ஆட்கள் நீங்க மட்டும் தான்... நான் ரொம்ப பணக்கஷ்டத்துல இருக்கேன்... ஏதோ இப்ப ஒரு சேனல் எனக்கு வாய்ப்பு தராங்க.. நான் எழுதி இயக்கனுமாம்.. எனக்கும் அனுபவமில்ல ஆனா புதுசா எதாவது செஞ்சாகனும்.. எனக்கான வருமானம் இப்ப அவசியம்..

நடக்கட்டும்டா உன்ன நம்பி எவ்வளவோ செஞ்சோம் இதயும் பாக்கலாமே..எனக்கு என்ன கேரக்டர் ? நான் தான ஹீரோ? 

இல்ல சாமி நீங்க சைட் ரோல் தான் . எனக்கு நீங்க எப்பவும் ஹீரோ தான்.. சரி சாமி வர 6ம் தேதி முதல் எபிசோட் எடுக்கனும்.. வரேன் நாளைக்கு டையலாக் வந்துரும்..

    **********________*******-----***

 கப்பல்துறை அமைச்சர் நீலகண்டன்.. பேரு சரியா அமையுது பாருயா. நீல நிறமுடைய கண்டம் உடையவன் . நீலகண்டன்.. அலுவலகத்தின் வாயிலில் அவரை பார்த்து பேச ஐந்தாவது நாளாக காத்திருக்கிறார். அந்த ஆசாமி. 29 வயது வாலிபன். சுமார் உயரம் .திராவிட நிறம் . கருந்தலையிற் சுருகளாக. முதலில் கோரமான உருவமாய் நினைத்த அந்த வரவேற்பு பெண்ணுக்கும் இன்று ஏதோ அழகாய் இருப்பதாய் எண்ணும்படி பழக்கபட்டேவிட்டது. இன்னும் அமைச்சரை மட்டும் பார்க்கவில்லை.. மதிய உணவிற்கு பின் பேசிக்கொள்ளும் அளவிற்கு பழகிவிட்டனர்..

ஆமா பேரு என்ன சொன்னீங்க? . ஜீவா . ம் ஜீவா ஏன் இத்தனை நாளா காத்திருக்கீங்க?  

ஒரு முக்கியமான விசயத்துக்காக தான். நான் ஒரிசா  பாலுங்கிறவர்கிட்ட உதவியாளரா இருந்தேன் பின்ன தனியா ஆராய்ச்சிக்குனு வந்துட்டேன். எங்கள் ஆராய்ச்சி எல்லாம் கடலும் கடலை சார்ந்த கலாச்சார அறிவியல் மாற்றங்களும்தான். இப்ப ஒரு எச்சரிக்கை சொல்லிட்டு போகதான் வந்தேன்.

ஏன் மறுபடியும் எதாவது புயல் வர போகுதா.? 

ஜீவா தன் பையிலிருந்த புகைப்படங்களை எடுத்து காண்பித்தார்..

ஐயா. இது ஜப்பான் நாட்டு பகுதிக்குட்பட்ட  கடலில் இருக்கும் நண்டுடைய போட்டோ. இதோ இந்த போட்டோ பாருங்க. அதே நண்டு நம்ம மெரினாவுல கிடந்தப்ப எடுத்த போட்டோ இந்த நண்ட நாங்க எடுக்கும் போது ஒரு நிமிசம் தான் ஒரு முப்பதாயிரம் நண்டுக்கு மேல கறைக்கு வந்தது. உடனடியா நாங்க இத லேப்ல குடுத்து ஆராய்ச்சி பண்ணப்ப. 

நீங்க சொல்லுங்க ஜப்பானுல இருந்து ஒரு கப்பல் கிளம்பினா சென்னை வர எத்தனை நாளாகும்?..

 7-14 நாளாகும் . அதுக்கென்னயா இப்ப? நண்டு வந்தா பொறிச்சி தின்னுட்டு போவியா? 

கேளுங்க ஐயா. இந்த மொத்த நண்டுகளும் 9 மணி நேரத்துல வந்துருக்கு. 

யோவ் என்னயா கனவு கண்டியா? இந்த ஆராய்ச்சி காரங்கனாலே எனக்கு அலர்ஜி கிளம்பு மொதல்ல..

சரிங்க உங்களுக்கு விளக்கமெல்லாம் சொல்லல ஆனா தயவு செஞ்சு இன்னும் 4 நாளுக்கு சென்னை கடலுக்கு குறுக்க எந்த கப்பலும் போகாம பாத்துக்கோங்க.. நான் வரேன்..

வெளியே வந்த ஜீவா ஒரு கம்பௌண்ட் லெட்டர் ஒன்றை குடுத்துவிட்டு கிளம்ப.. அதனை அமைச்சரிடம் சேர்ப்பித்த வரவேற்பு பெண் அமைச்சரதனை பஐ்ஐியின் ஆயில் பில்டராக பயன்படுத்துவதை பார்த்து மனதிற்குள் சபித்துகொண்டாள்..

    ********************++++*********

என்ன ஜேம்ஸ் ஓர்க் முடிஞ்சிதா?... ஓ முடிஞ்சது ராபர்ட்.. என்ன இன்னிக்கி இப்படி குளிரிது.?.. அடிக்கிற குளிரபாத்தா உறைஞ்சிபோய் பனி சிலை ஆகிருவோம் போல.. என்கிறாள் ஸ்டான்சி.. எங்கள பத்தி தெரியல ஸ்டான். ஆனா நீ எப்பவுமே பனிசிலைதான்..

இருக்குற குளிர் போதும் நீங்க ஐஸ் வெக்க வேண்டாம். ஜேம்ஸ் சிக்னல் எல்லாத்தையும் செக் பண்ணிடு. ராபர்ட் நீங்க தெர்மோசீட்லாம் கவர் பண்ணுங்க.. ஈவ்னிங் 6 ஓ க்ளாக் புயல் வருமாம் ப்ரெடிக்ட்டர்ல வந்தது..

3..2..1.. வருக வருக புயலே...

===============================

யாத்தே .. ஏன்யா பாண்டி. இங்க பாருயா .. சிலுசிலுனு இருந்த மெரீனா கடலே ஏதோ ராவோட ராவா தீப்புடிச்சி கருகுனமாறி கண்ணங்கறேலுனு ஆகிபோச்சி. நண்டு நத்தையெல்லாம் தாரப்பூசினமாதிரி கெடக்கு.. நெத்திலி மீனு விளாங்கு மீனெல்லாம் செத்துமிதக்குலே. என்று பதறியளறிய குருவம்மா குரலொடுங்கு முன்னமே பாண்டியும் மீனவ குப்பமும் கடலலை ஓட்டி கூடியிருந்தன.. தமிழக அரசு பரபரக்க வேண்டிய காரணமிது... ஆனால்... அதிகார சொப்பனத்திலிருந்து மீளவில்லை அது.. பத்திரிக்கைகளும் சூழ்ந்து நின்று படம்பிடத்தனவே தவிர யாருக்கும் இன்னும் விளங்கவேயில்லை இந்த மர்மம்.. 

பின்னொரு அதிகாலை அவசரத்திற்கு ஒதுங்கும் சிறுவன். சிறுவயதிலேயே வேலைக்கு செல்பவன் .சொல்கிறான். பழைய இன்சினாயில் மாதிரி இருக்குதேனு.. உடனே பத்திரிக்கைகள் கடலுக்கடியில் உள்ளகச்சா எண்ணை பாறைகள் உடைந்ததால் எண்ணை வெளியறியுள்ளது என செய்திகளை பரப்பி விட்டன.. 

ஆனால் அமைச்சரவை தகவல்கள் கப்பல் மோதியதை சொல்லியுடைத்து மாநில அரசுமத்திய அரசையும் மத்திய அரசு மாநில அரசையும் வாடிக்கை சாடல்கள் செய்தனவே தவிர..

திடீரென ஒரு கும்பல் தன்னார்வத்தால் பக்கெட்டால் எண்ணெயை அப்புற படுத்த. உடனிருந்த குப்பத்து மக்கள் இறந்த மீன்களையும் நண்டு ஆமைகளையும் மீட்டு வெளியறிட மெதுமெதுவாய் ஆரம்பிக்கிறது மீட்பு பணி.. அவரவர்கள் கருகிய கடலை மீட்க தம்மால் ஆன உதவிகளை செய்ய.

அந்தபக்க கடற்கரையில் விசயம் தெரிந்தும் ஒரு பூநூல் கவிஞன் கடலை எண்ணி கவிதைகளை எழுதுகிறான்..

அரசும் ஓரு அருமையான மீட்புப்பணிக்கு பக்கெட்டுகளை வழங்கியது.. நாம் பக்கெட்டுகள் வாங்க இயலாமல் தான் தவிக்கிறோமாம்.. அதுபோதாதென அனைத்து வேலையற்ற அறிவிற்சிறந்தோரெல்லாம் வாட்ஸ் அப்பில் அறிவுரைகளையும் கேலிகளையும் பரப்பிட இது ஒரு ல்ல வாய்ப்பு.. நானே ரசித்த ஐடியா தேங்காய் நாரை கடலில் கொட்டுவது என வந்தது. முதலில் கடல் நீரைத்தானே நார் உறுஞ்சும்?. தெர்மாக்கோல் திட்டம் போல தான் இதும்..

 ------------------------------------------------------------------

அமைச்சர் அலுவலகத்தின் வாசலிற் ஆத்திரத்துடன் அந்த வாலிபன் ஜீவா.. அமைச்சரை கண்டதும். வாயில் வந்ததையெல்லாம் கொட்டிவிட்டு. சொன்னனே கேட்டீங்களா நீ தின்ன பஐ்ஐி பேப்பர் பண்ண வேலய பாத்தியா?.. 

ஏன்யா எவனுமே தப்பு பண்ணலயா? அப்படி என்ன நானும் பண்ணிட்டேன்? அப்படி என்ன பண்ணிட்டியா? செத்த மீனுங்கள அனுப்ப சொல்றேன் தின்னு பாக்கலாம்.. இப்படி அது செத்த நாளைக்கு நீயும் மொத்த மனுஷ இனமும் அழிஞ்சி போயிரும்...

+++++++++++++++************+++++++

சாமி சார் டைலாக் படிச்சிட்டீங்கள்ள.. கதைப்படி நீங்க நிலாவுக்கு அப்பா. ஆர்கியாலஜிஸ்ட். நிலா ஒரு டாக்டர்.. ஹரிஷ் நிலாவோட லவ்வர் . நீங்களும் ஏத்துகிட்ட லவ்வர். அமேரிக்காவுல ரிசர்ச் முடிச்சிட்டு சென்னை வரீங்க ஹரிஷ் உங்கள பிக்கப் பன்றான் . ஹரிஷ் சயின்டிஸ்ட்னு ஏற்கனவே உங்களுக்கு தெரியும். இப்போ உங்களுக்கு ஒரு பிரச்சனை . அவனோட ஹெல்ப் தேவை. அதுதான் சீன் . டேக் போகலாமா?.

ஹரிஷ் உன்கிட்ட தனியா பேசனும். காபியுடன் வீற்றிருந்த நிலா . சரி மாமாக்கும் மருமகனும் ஆயிரம் இருக்கும்என எழுந்து கிளம்பிட..

ஹரிஷ் எனக்கு ஒரு உதவி பண்ணனும். சொல்லுங்க மாமா.  என்றிட ஹரிஷை போலீஸ் கைதுசெய்கிறது. அதோட தொடரும் போட்டிடனும்.

சார் நிஜமாவே போலீஸ் ஹரிஷ கைது பண்ணிட்டாங்க. பரவாயில்லையே என் டைரெக்ஷன் அவ்வளவு க்ளியராவா இருக்கு ? . அதுயில்ல. நிலா ஓடிவந்து அண்ணா ஹரிஷ போலீஸ் அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய்ட்டாங்க.. வாட் வண்டிய எடு உடனே போகலாம்.

வக்கீல் சார். ஹரிஷ போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க என்ன ரீசன் தெரியல திடீர்னு  நடந்துருச்சி. 

சரி சரி இரு கார்த்தி சென்னைல தான் இருக்கான் அவன அனுப்புறேன். நாங்கள் ஸ்டேசன் செல்லும் முன் கார்த்தியை சென்று அழைத்து வருவதாக  முடிவு..

ஹலோ சிவராம் . சாரி இது திடீர்னு நடந்தது. மன்னிக்கனும்.. சரிங்க சார் எங்களுக்கு இது மாதிரி நிறைய நடந்துருக்கு நீங்க பாத்து முடிச்சிட்டு மெல்ல வந்தே ஆரம்பிங்க..

************::::::;;;;;************---**********

கமிஷனர் ஆபிஸ் இன்வெஸ்டிகேஷன் கேபினெட்..  சொல்லுங்க ஹரிஷ் நடந்ததுக்கெல்லாம் நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க..

தரையை ஓங்கி மிதித்த கான்டபிள் ராஐா. சர் இவன பத்தின இன்பர்மேஷன் கலக்ட் பண்ணிடேன் சர். சொல்லு. 

1 ஜனவரி ஆப் திஸ் இயர். நம்ம ஜனாதிபதியின் ப்ரைவேட் சேனல்ல க்ராஸ்லிங்க் பண்ணி நியூ இயர் வாழ்த்து சொல்லிருக்கான். 2010 ல யுவர்சிட்டி வெப் ரிசல்ட்ட மாத்தினதுக்காக சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க. அண்ட் லாஸ்ட் வீக் கூட உங்க பேஸ்புக் அக்கெளண்ட ஹேக் பண்ணி லைவ் வீடியோ ஒன்ன அப்லோட் பண்ணிருக்கான்..

இப்ப சொல்லு இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்ல போற?..





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post